மருத்துவ மூலிகைகள் என்பன நோயை நீக்கிக் கொள்ள மிகப் பழங்காலத்திலிருந்தே உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகும். இவை மனிதர்களால் மட்டுமல்லாமல் மிருகங்களாலும் பயன்படுத்தப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.
வயிற்றுக் கழிச்சல், ஒவ்வாமை போன்ற குறைபாடு ஏற்பட்டால், புலி இரையைத் தேடாமல் சில குறிப்பிட்ட தாவரங்களை மட்டும் தேடி உண்டு விட்டு குறை தீரும் வரை உபவாசம் இருப்பதாக அறிந்துள்ளார்கள்.
பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளான சித்த, ஆயுர்வேத முறைகள், சீன மற்றும் திபெத்திய மருத்துவ முறைகளில் மருத்துவ மூலிகைகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளன. உலகில் எவ்வாறு உயிரினங்களின் தேவைக்காக உணவு படைக்கப்பட்டதோ, அதே போல அவைகளுக்கு ஏற்படக் கூடிய நோய்களுக்கு மருந்துகளும் படைக்கப்பட்டுள்ளன என்பது எல்லாப் பாரம்பரிய மருத்துவ முறைகளின் அடிப்படைக் கருத்தாகும்.
சித்த, ஆயுர்வேத முறைகளில் தாவரங்களில் உள்ள குணாதிசயங்கள் மட்டுமல்லாமல், சில குறிப்பிட்ட கால நேரங்களில் கிரக நிலைக்கேற்ப இந்த தாவரங்களில் பொதிந்து விலகும் 'எல்லைக்கு அப்பாற்பட்ட சக்தி'களும் மிக முக்கிய பண்பாகக் கருதப்படுகிறது. ஆகவே இந்தத் தாவரங்களை மருத்துவத்திற்க்காக சேகரிக்கும் காலங்களும், சேகரிப்பவரின் உடல் சுத்தம், உள்ளச் சுத்தம், சேகரிக்கும் போதும் மருந்து தயாரிக்கும் போது உச்சரிக்க வேண்டியவை முதலியவற்றை தேர்ந்த வல்லுநரிடமே அறிந்து கொள்ள வேண்டும்.
பல மூலிகைகளில் உள்ள நற்பயன்களைப் பெறும் முன்பு, அதில் உள்ள எதிர்த் தன்மைகளை நீக்க வேண்டும், அப்போது தான் அந்த நற்பயன்களை தேவையான அளவில் நேரடியாக பெற முடியும். உதாரணமாக, மிளகை நாம் சாதாரணமாக உணவில் பயன்படுத்துகிறோம். ஆனால் மருத்துவத்திற்கு பயன்படுத்தும் முன்பு அதில் உள்ள எதிர்த் தன்மைகளை (மருத்துவக் கூற்றுப்படி - நச்சுத் தன்மைகளை) நீக்க மிளகை புளித்த மோரில் 3 மணி நேரம் ஊறவைத்து உலர்த்த வேண்டும்.
மூலிகைகள் சாதாரணமாக பக்க விளைவுகள் இல்லாதவை. மேலும் பல மூலிகைகளை நாம் தினசரி உணவிலும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் மருத்துவ முறைகளில் உபயோகிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய பல நுணுக்கங்கள் இருப்பதால், மூலிகைகளின் முழுப்பயனை அடைய தேர்ந்த வல்லுநரின் வழிகாட்டலின் படி நடப்பதே சிறந்தது.
வயிற்றுக் கழிச்சல், ஒவ்வாமை போன்ற குறைபாடு ஏற்பட்டால், புலி இரையைத் தேடாமல் சில குறிப்பிட்ட தாவரங்களை மட்டும் தேடி உண்டு விட்டு குறை தீரும் வரை உபவாசம் இருப்பதாக அறிந்துள்ளார்கள்.
பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளான சித்த, ஆயுர்வேத முறைகள், சீன மற்றும் திபெத்திய மருத்துவ முறைகளில் மருத்துவ மூலிகைகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளன. உலகில் எவ்வாறு உயிரினங்களின் தேவைக்காக உணவு படைக்கப்பட்டதோ, அதே போல அவைகளுக்கு ஏற்படக் கூடிய நோய்களுக்கு மருந்துகளும் படைக்கப்பட்டுள்ளன என்பது எல்லாப் பாரம்பரிய மருத்துவ முறைகளின் அடிப்படைக் கருத்தாகும்.
மூலிகைகளை உபயோகிக்கும் முறைகள்
இந்த மூலிகைகளை நேரடியாக உபயோகிக்கும் முன்பாக, சில விபரங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.சித்த, ஆயுர்வேத முறைகளில் தாவரங்களில் உள்ள குணாதிசயங்கள் மட்டுமல்லாமல், சில குறிப்பிட்ட கால நேரங்களில் கிரக நிலைக்கேற்ப இந்த தாவரங்களில் பொதிந்து விலகும் 'எல்லைக்கு அப்பாற்பட்ட சக்தி'களும் மிக முக்கிய பண்பாகக் கருதப்படுகிறது. ஆகவே இந்தத் தாவரங்களை மருத்துவத்திற்க்காக சேகரிக்கும் காலங்களும், சேகரிப்பவரின் உடல் சுத்தம், உள்ளச் சுத்தம், சேகரிக்கும் போதும் மருந்து தயாரிக்கும் போது உச்சரிக்க வேண்டியவை முதலியவற்றை தேர்ந்த வல்லுநரிடமே அறிந்து கொள்ள வேண்டும்.
பல மூலிகைகளில் உள்ள நற்பயன்களைப் பெறும் முன்பு, அதில் உள்ள எதிர்த் தன்மைகளை நீக்க வேண்டும், அப்போது தான் அந்த நற்பயன்களை தேவையான அளவில் நேரடியாக பெற முடியும். உதாரணமாக, மிளகை நாம் சாதாரணமாக உணவில் பயன்படுத்துகிறோம். ஆனால் மருத்துவத்திற்கு பயன்படுத்தும் முன்பு அதில் உள்ள எதிர்த் தன்மைகளை (மருத்துவக் கூற்றுப்படி - நச்சுத் தன்மைகளை) நீக்க மிளகை புளித்த மோரில் 3 மணி நேரம் ஊறவைத்து உலர்த்த வேண்டும்.
மூலிகைகள் சாதாரணமாக பக்க விளைவுகள் இல்லாதவை. மேலும் பல மூலிகைகளை நாம் தினசரி உணவிலும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் மருத்துவ முறைகளில் உபயோகிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய பல நுணுக்கங்கள் இருப்பதால், மூலிகைகளின் முழுப்பயனை அடைய தேர்ந்த வல்லுநரின் வழிகாட்டலின் படி நடப்பதே சிறந்தது.
I'm Saravanan 32 from hosur I'm suffering. Pakavatham since one year my left leg and left hand has been please guide me for recovery
பதிலளிநீக்குI'm Saravanan my age 32 I'm suffering stroke(pakavatham) since one year

பதிலளிநீக்கு