வியாழன், 1 டிசம்பர், 2011

தேன்

தேன்

          தேன் ஓர் இனிய உணவுப்பொருள் ஆகும். மருத்துவ குணமும் கொண்டது. பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில் (திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகின்றன. தூய தேனில் தண்ணீரோ வேறு சுவையூட்டும் பொருட்களோ கொஞ்சமும் கலந்திருக்காது. நீர்ம (திரவ) நிலையில் உள்ள தேன் கெட்டுப் போவது இல்லை. தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து, நுண்ணுயிர்களை (கிருமிகளை) வளர விடுவது இல்லை. பதப்பபடுத்தப் படாத தேனில் 14% - 18% ஈரத்தன்மை உள்ளது. 18%க்கு கீழே ஈரத்தன்மை உள்ள வரை தேனில் நுண்ணுயிர்கள் (கிருமிகள்) வளர இயலாது. தேன் என்பது குளுகோஸ், புரக்டோஸ், நீர், மற்றும் சில என்ஸைம்கள் சிலவகை எண்ணெய்கள் ஆகியவை அடங்கியதாகும். இவை மலரிருந்து கொண்டு வரும் குளுகோஸ் 40 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை நீர் நிறைந்ததாக இருக்கும். ஆனால் இவை உற்பத்தி செய்யும் தேனில் 16 முதல் 18 சதவிகிதமே நீர் இருக்கும். இவற்றின் நிறம் மற்றும் சுவை தேனீக்களின் வயது மற்றும் அந்த பகுதியில் அமைந்திருக்கும் தாவர வகைகளைப் பொறுத்து மாறுபட்டு இருக்கும். பொதுவாக தேன் மஞ்சள் நிறமுடையதாய் இருக்கும். வெளிர் மஞ்சள் நிற தேன் தரம் வாய்ந்ததாய் இருக்கும். ஆரஞ்சு மரத்தின் பூக்களைக் கொண்டு தேனீக்களினால் உருவாக்கப்படும் தேன் முதல் தரமானதாகக் கருதப்படுகின்றது. குறைந்த தரம் வாய்ந்த தேன் பஹ்வீட் (Buckwheat) என்னும் தாவரத்திலிருந்து பெறப்படும் தேனாகும். ஏனெனில் அந்த தேன் அடர்ந்த மஞ்சள் நிறமானதாய் இருக்கும்.

உலகம் முழுதும் தேனீக்கள் பொருளாதார ரீதியாக செயற்கை முறையில் (Bee Keeping) வளர்க்கப் படுகின்றது. நல்ல பொருளாதாரத்தை ஈட்டிக்கொடுக்கக் கூடிய தொழிலாகவும் இது விளங்கிவருகின்றது. நல்ல ஆரோக்கியமான கூட்டில் 14 முதல் 23 கிலோ வரை தேன் சேகரிக்கப்படுகின்றது. இவை தங்கள் குளிர்கால உணவுத் தேவையைக் காட்டிலும் மிக கூடுதலாகும். இவற்றின் மிஞ்சிய தேன் எடுத்துக்கொள்ளப்பட்டு அவற்றின் உயிர் தேவைக்கான கொஞ்சம் தேன் விட்டு வைக்கப்படுகின்றது. உலகத்தின் தேன் தேவையை பெருமளவிற்கு செயற்கைத் தேன் வளர்ப்பின் மூலமே சரிகட்டப்படுகின்றது. 8 முதல் 10 பவுண்டு தேனை சேகரிக்கும் போது அந்த கூட்டிலிருநது 1 பவுண்டு எடையுடைய தேன் மெழுகு கிடைக்கின்றது. தேன் என்பது ஒரு தூய கார்போ-ஹைட்ரேட் உணவாகும். இவை பல மருத்துவப் பயன்பாட்டிற்கு உதவுகின்றன.

இது நிறைய கலோரி நிறைந்ததாகும். உதாரணத்திற்கு ஒரு அவுன்ஸ் தேன் மூலம் ஈக்களுக்கு கிடைக்கும் ஆற்றல் ஒரு முறை உலகைச் சுற்றி வரப் போதுமானதாகும். இந்த தேன் மற்ற திரவத்தைக் காட்டிலும் அடர்த்தி நிறைந்ததாகும். ஒரு குவளை சர்க்கரை நீரின் எடை சுமார் 7 அவுன்ஸ் ஆகும். ஆனால் ஒரு குவளைத் தேனின் எடை 12 அவுன்ஸ் ஆகும். ஏறக்குறைய இருமடங்கு எடையாகும்.

உலகில் தேன் வழி நிகழும் பொருளியல் ஈட்டம் பில்லியன் டாலர் கணக்கில் இருக்கும். அமெரிக்காவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 94 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்கிறார்கள் (1985 ஆம் ஆண்டுக் கணக்கு) [1], கனடாவில் ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 34 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்கின்றார்கள் [2]

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

1. மூலிகையின் பெயர் -: வெற்றிலை.

2. தாவரப் பெயர் -: PIPER BETEL.
3. தாவரக்குடும்பம் -: PIPER ACEAE.
4. வேறு பெயர் -: தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல் என்பன.

5. வகைகள்-கம்மாறு வெற்றிலை, கற்பூரவெற்றிலை மற்றும் சாதாரண வெற்றிலை என்பன.

6. பயன்தரும் பாகங்கள் -: கொடியின் இலை மற்றும் வேர்.

7. வளரியல்பு -: இது இந்தியாவில் வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும், வளர்கிறது. இது ஒரு கொடி வகையைச் சேர்ந்தது. இதன் இலைகள் இதயவடிவில் பெரிதாக இருப்பதோடு நுனி கூர்மையாகவும் இருக்கும். வடிகால் வசதி இருக்கவேண்டும். அகத்தி மரங்களை இடையில் வளர்த்தி அதில் கொடிகள் வளர வளர கட்டிக்கொண்டே செல்வார்கள் மூங்கில் களிகளையும் பயன்படுத்துவார்கள். இதை ஆற்றுப் படுகைகளில் வியாபார ரீதியாக அதுகம் பயிரிடுகிறார்கள். கருப்பு நிறமுடன் நல்ல காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை. கற்பூர மணத்துடன் சறிது காரமாகவும் இருப்பது கற்பூர வெற்றலையாகும். வெற்றிலைக்கு நல்ல மணமும் , காரமும் உண்டு. இது கொடி பதியம் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

8. மருத்துவப் பயன்கள் -: பொதுவான குணம். சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும்.

வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.

வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.

குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.

வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.

குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.

வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.

கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும்.

வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். சிறப்பாக இதை இரவில் கட்டுவது நல்லது.

சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். 5 கிராம் சூரணம்+10 மி.லி. வெற்றிலைச்சாறு தேன் 10 கிராம் கலந்து காலை, மாலை நோயிக்குத் தக்க வாறு 48-96 நாள் சாப்பிட வேண்டும்.

குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும்.

வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும்.

விடாது மூக்கில் ஒழுகும் சளிக்கும் வெற்றிலைச்சாற்றை மூக்கில் விட குணமாகும்.

ஒரிசாவில் சில பகுதிகளில் பெண்கள் குழந்தைகள் பிறக்காமல் தடுக்க 10 கிராம் வெற்றிலை வேரையும், மிளகையும் சம அளவு வைத்து அரைத்து 20-40 நாட்கள் சாப்பிட்டு வருகிறார்கள்.

வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

நுரையீரல் சம்பந்தமான நோய்களிக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்மடும்.

சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.

“வெற்றிலைக்கு முன்னம் பெறும் பாக்கை வாயிலிட்டால்
குற்றமுறும் உறவோர் கூட்டம்போம்-வெற்றிலையை
முன்னிட்டுப் பாக்கருந்த மூதறிவோர் தம் மார்பின்
மன்னிட்டு வாழும் பூ மாது

அடைக்காய் தின்பதில் ஊறுமுதல் நீர் நஞ்சாம்
அதி பித்தம் இரண்டாவதூறு நீரே
கடையமிர்தம் மூன்றாவதூறு நீர் தான்
கனமதுர நான்காவதூறு மந்நீர்
மடையெனவே ஐந்தாறிற் சுரந்துள் ஊறி
வருநீர் களைச் சுகித்து
தடையுருப் பித்தமொடு மந்த நோயும்
தளர்பாண்டு நோயும் உண்டாம் தரம் சொன்னோம்.”
) மூலிகையின் பெயர் -: வேலிப்பருத்தி.

2) தாவரப்பெயர் -: DAEMIA EXTENSA.

3) தாவரக்குடும்பம் -: ASCLEPIADACEAE

4) வேறு பெயர்கள்-: உத்தம கன்னிகை மற்றும் உத்தாமணி.

5) பயன் தரும் பாகம் -: இலை,வேர் முதலியன.

6) வளரியல்பு -: தமிழகமெங்கும் வேலிகளில் தானே படர்ந்து வளர்கிறது. இதயவடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு பசுமை நிற வெகுட்டல் மணமுடைய பூங்கொத்துக் களையும் மென்மையான முட்களைக்கொண்ட இரட்டைக் காய்களையும், பாலுள்ள பிசுபிசுப்பான ஏறுகொடி. முட்டைவடிவ விதைகளில் பட்டுப் போன்ற பஞ்சுகள்காணப்படும். இதனை உந்தாமணி என்றும்குறிப்பிடுவதுண்டு.காய்கள் காய்ந்து வெடித்துப் பஞ்சுகளுடன் விதையும் சேர்த்துப் பறந்து சென்று வேறு இடங்களில் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

7) மருத்துவப்பயன்கள் -: இது நெஞ்சிலே இருக்கின்ற கோழையை அகற்றி வாந்தியை உண்டாக்குவதோடு புழுக்களைக் கொல்லும் தன்மையுடையது.
இதன் இலையை இடித்துப் பிழிந்த சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் அருந்தி வர ஆஸ்த்துமாவுக்கும் பாம்புக் கடிகளுக்கும் குணம் ஏற்படும்.
நாள்பட்ட புண்களுக்கு இதன் இலையை அரைத்துக் கட்டி வந்தால் புண்கள் எளிதில் ஆறும்.
பெண்களுக்கு மாதவிலக்கின் போது உண்டாகும் வயிற்று வலிக்கு வேலிப் பருத்தி இலைச்சாற்றைத் தேனுடன் கலந்து அருந்தி வர குணம் தரும்.
குழந்தைகளுக்கு வயிற்றில் புழுத் தொந்தரவு அதிகமாக இருந்தால் இதன் இலையைக் குடிநீரிட்டு ஒரு பாலாடை அளவு கொடுத்து வர புழுக்கள் வெளியாகும்.
கால் வீக்கங்களுக்கும், உடம்பில் அடிபட்ட வீக்கங்களுக்கும், இதன் இலைச் சாற்றையும், சுண்ணாம்பையும் கலந்து பூசி வர அவை குணமாகும்.
இதன் இலைச்சாற்றுடன் தேன் கலந்து அருந்தி வர இருமல் தணியும்.
இதன் இலையை நன்கு அரைத்து எடுத்த விழுதை நகச்சுற்று, கண்ட மாலை இவைகளுக்குப் பற்றிட்டுவர நல்ல குணம் தரும்.
காணாக்கடி, அரிப்பு, தடிப்புக்கு இதன் இலைச்சாறு தடவலாம்.
இலையை வதக்கித் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கக் கீல் வாதம், முடக்கு வாதம், வாதக் கடைச்சல், இடுப்புவலி மிதலியன குணமாகும்.
இலைச்சாற்றுடன் சுக்கு, பெருங்காயம்,பொடித்துக் காயச்சி இளஞ்சீட்டில் பற்றிட வாத வலி, வீக்கம் குணமாகும், யானைக்கால் நோய்தொடக்க நிலையில் இருந்தால் 40,50 நாள்களில் குணமாக்கலாம்.
இதன் வேரை உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 சிட்டிகை வரை பாலில் கொடுக்க குழந்தைகளின் வாயுத் தொல்லைகள் நீங்கிப் பேதியாகும், பூச்சி, கிருமிகள் சாகும்.
இதன் இலைச்சாற்றில் 7முறை மிளகை ஊறவைத்து வெய்யிலில் உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 அரிசி எடை பால் அல்லது தேனில் கொடுக்கக் குழந்தைகளின் செரியாமை, வாந்தி, மந்தம், மாந்த இழப்பு, கை,கால் சில்லிட்டுப் போதல், சுரம் முதலிய சகல குழந்தை வியாதிகளுக்கும் கொடுக்கலாம்.
5 கிராம் வேரைப் பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை மட்டும் 3 நாள் கொடுக்க நஞ்சுக் கடி, கரப்பான், கிரந்தி, சூலை, பிடிப்பு, வாயு முதலியவை போகும்.
உந்தாமணி, பொடுதலை, நுணா,நொச்சி ஆகியவற்றின் இலைகளைவகைக்கு 1 பிடி வதக்கிப் பிழிந்த சாறு 10 மி.லி. கொடுக்கச் சளியோடு கூடிய மாந்தம் தீரும்.
தக்க வயதடைந்தும் பெண் ருதுவாகாவிட்டால் வேலிப்பருத்தி இலைகள் ஆறு எண்ணம் எடுத்துச் சுத்தப்படுத்தி மூன்று மிளகு சேர்த்து அம்மியில் மைபோல் அரைத்து கழற்சிக்காய் அளவு பத்து தினங்கள் தொடர்ந்து உடகொண்டு வர ருதுவாகாத பெண்கள் ருது ஆவார்கள்.

'ஆலித் தெழுந்தநோ யத்தனையும் தீருமேவேலிப் பருத்தியதன் மெல்லிலையால்-வேலொத்துக்கண்டிக்கும் வாதஞ்சன்னி தோஷ மும்போமுண்டிக்கும் வாசனையா மோது'

'உத்தா மணியிலையா லும்வயிற்றுக் குன்மமொடுகுத்தாம் வலியும் குளிரும்போம்-பற்றிதுதியதன்று சொறிசிரங்குந் தொல்லுலகில் நாளும்புதியன் மூலின் புகல்.'
லிகையின் பெயர் -: வாதநாராயணன்.

2. தாவரப் பெயர் -: DELONIX ELATA.
3. தாவரக்குடும்பம் -: CAESAL PINIOIDEAE.
4. வேறு பெயர்கள் -: வாதரக்காட்சி, ஆதிநாராயணன், வாதரசு, தழுதாழை வாதமடக்கி எனவும் ஆங்கிலத்தில் TIGER BEAM, WHITE GULMOHUR என்றும் அழைப்பர்.

5. பயன் தரும் பாகங்கள் -: இலை, பட்டை, வேர், சேகு மரம் ஆகியவை.

6. வளரியல்பு -: வாதநாராயணன் தாயகம் காங்கோ, எகிப்து, கென்யா, சூடன், உகண்டா, எத்தோபியா, போன்ற நாடுகள். பின் இந்தியா, ஸ்ரீலங்கா, பாக்கீஸ்தான், சாம்பியா ஆகிய நாடுகளிக்குப் பரவியது. மரவகையைச் சேர்ந்தது. செம்மண்ணில் நன்கு வளரும். ஆற்றங்கறைகளில் அதிகம் காணப்படும். இது பத்தடி முதல் 45 அடி வரை வளரக்கூடியது. தமிழகமெங்கும் வளரக்கூடியது. வெப்ப நாடுகளில் ஏராளமாகப் பயிராகும். வீடுகளிலும், தோட்டங்களிலும், பூங்காக்களிலும் இதனை வளர்ப்பார்கள். இதன் இலை பார்பதற்கு புளியிலைகளைப் போன்று சிறிதாக இருக்கும். கால்நடைகளுக்கு நல்ல தீவனம். இரு சிறகான சிறு இலைகளையுடைய கூட்டிலை 10-14 ஜதைகளாகவும் உச்சுயில் பகட்டான பெரிய பூக்களையும் தட்டையான காய்களையும் உடைய வெளிர் மஞ்சள் சிவப்பு நிறமுடைய மரம். பூக்கள் பூத்துக்கொண்டே இருக்கும். மே, ஜூன் மாதங்களில் காய்கள் விடும். இது விதை மூலமும், கட்டிங் மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. விதைகளை விதைக்கும் மூன்பு 24 மணி நேரம் ஊரவைக்க வேண்டும்.

7. மருத்துவப் பயன்கள் -: வாதயாராயணன் பித்த நீர் பெருக்குதல், நாடி நடையை மிகுத்து உடல் வெப்பம் தருதல், உடலில் இருக்கிற வாதம் அடக்கி மலத்தை வெளிப்படுத்தும். வாய்வைக் குறைக்கும். பித்தம் உண்டாக்கும். வீக்கம் கரைக்கும். குத்தல் குடைச்சல் குணமாகும். நாடி நரம்புகளைப் பலப்படுத்தும். ஆடாதொடை போல இழுப்பு சன்னியைக் குணமாக்கும். பல ஆண்டுகளான சேகு மரத்தை தண்ணீரில் ஊர வைத்து கெட்டியாக்கி தேக்கு மரம் போன்று உபயோகப்படுத்துவார்கள்.

இதன் இலையை எள் நெய்யில் வதக்கி, உளுந்துப் பருப்பு, பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லி, மிளகாய், உப்பு, புளி சேர்த்து துவையல் அரைத்து வாரம் ஒருமுறை உணவில் சாப்பிட பேதியாகும். வாத நோய் தீரும்.

இலையை இடித்துப் பிழிந்த சாறு 500 மி.லி. சிற்றாமணக்கு நெய் 500 மி.லி. பூண்டு 100 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி வகைகு 30 கிராம், வெள்ளைக் கடுகு 20 கிராம் எல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் காய்ச்சி, பதத்தில் வடித்து வைத்து, இதில் 5 -10 மில்லி உள்ளுக்குக் கொடுத்து வெந்நீர் அருந்த பேதியாகும். அனைத்து வாத நோய்களும் குணமாகும். மேல் பூச்சாக பூசலாம். கீல் வாதம், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி, கை கால் குடைச்சல், மூட்டு வீக்கம், இடுப்பு வலி, இளம்பிள்ளை வாதம், இழப்பு, சன்னி, மேகநோய் யாவும் குணமாகும். மலச்சிக்கல் முழுவதும் குணமாகும்.

சொறி சிரங்கிற்கு இதன் இலையுடன் குப்பைமேனி இலை, மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து மேலே தடவி, குளிர்ந்த நீரில் குளித்து வர அவை நீங்கும்.

மேக நோயால் அவதிப்படுபவர்கள் இதன் இலையை நன்கு உலர்த்திப் பொடி செய்து காலை, மாலை 1 கிராம் வீதம் வெந்நீருடன் கலந்து அருந்தி வர குணமாகும்.

இரத்த சீதபேதிக்கு வாதநாராயணன் வேரை அரைத்து எருமைத் தியிருடன் கலந்து அருந்த குணம் தெரியும்.

இலையைப் போட்டுக் கோதிக்க வைத்துக் குளிக்க உடம்பு வலி தீரும்.

நகச்சுத்தி, கடுமையான வலியுடன் நகக்கண்ணில் வீக்கம் வரும். இதற்கு பிற மருந்துகள் எதுவும் கேட்பதில்லை. இதன் தளிரை மைபோல் அரைத்து வெண்ணெயில் மத்தித்து வைத்துக் கட்ட இரு நாளில் குணமாகும். வலி உடனே நிற்கும்.

இதன் இலைச்சாறு 1 லிட்டர், மஞ்சள் கரிசலாங்கண்ணி, குப்பை மேனி, கறுப்பு வெற்றிலை இவற்றின் சாறு வகைக்குக் கால் லிட்டர் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெணெணெய வகைக்கு அரை லிட்டர், சுக்கு, மிளகு, திப்பிலி, கருஞ்சீரகம், சீரகம், மஞ்சள் வகைக்கு 20 கிராம் பொடித்து அரைத்து அரை லிட்டர் பசும் பாலுடன் கலக்கிப் பதமாகக் காய்ச்சி 21 வெள்ளெருக்கம் பூ நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி மேற்பூசாகத் தடவிப் பிடித்து விடப் பக்க வாதம், பாரிச வாயு, நரம்பு இழப்பு முக இசிவு, முகவாதம், கண், வாய், நாக்கு, உதடு, இழப்பு ஆகியவை தீரும்.

வாத நோய் எண்பது என்கின்றனர். இதன் இலை, பட்டை, வேர்பட்டை ஆகியன சூரணமாகவோ, குடி நீராகவோ, தைலமாகவோ சாப்பிட எல்லா வகையான வாதமும் தீரும்.

இதன் இலையின் சூரணத்தை 500 கிராம் அளவு வெந்நீரில் கலந்து குடிநீராக குடிக்க வாய்வுத் தொல்லை, வயிற்று வலி குணமாகும்.

“சேர்ந்த சொறி சிரங்கு, சேர்வாதம் எண்பதும் போம்
ஆர்ந்தெழுமாம் பித்தம் அதிகரித்த மாந்தமறும்-
ஐய்யின் சுரந்தணியும், ஆனதழுதாழைக்கே
மெய்யின் கடுப்பும் போம்விள்” -------குருமுனி.
முடக்கற்றான்.


1) மூலிகையின் பெயர் -: முடக்கற்றான்.


2) வேறுபெயர்கள் -: முடக்கறுத்தான், முடர்குற்றான், மொடக்கொத்தான்.


3) தாவரப்பெயர் -: CARDIOSPERMUM HALICACABUM.


4) தாவரக்குடும்பம் -: SAPINDACEAE.


5) பயன் தரும் பாகங்கள் -: இலை, தண்டு, வேர் முதலியன.


6) தாவர அமைப்பு -: முடக்கற்றான் கொடிவகையைச் சேர்ந்தது. இது இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது.குளிர்ந்த ஈரச்சத்துள்ள இடத்தில்தான் முடக்கற்றான் பயிராகும்.தோட்டங்கள், வீட்டு வேலி இவைகளிலுள்ள பெரிய செடிகளின்மேல் படர்ந்து வளரும். உஷ்ண பிரதேசங்களில் முடக்கற்றான் கொடியைப் பார்க்கமுடியாது. வளமான இடங்களில் இந்தக் கொடிசற்று பெரிய இலைகளுடன் செழிப்பாகப் படரும். இந்தக் கொடியின்தண்டும் இலைக் காம்பும் மெல்லியதாகவே இருக்கும். இது ஏறுகொடியாக சுமார் 3.5 மீ. அளவு படரும்.


இதன் தண்டு, இலை, காம்பு எல்லாம் நல்ல பச்சை நிறமாகவே இருக்கும். இதன் பூ வெண்நிறமாக இருக்கும். இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித் தனி அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அறையிலும் ஒரு விதை வீதம் ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும். காயைப் பறித்துத் தோலை உறித்தால் உள்ளே மிளகளவு, பச்சை நிறமான விதைகள் இருக்கும். அதன் ஒரு பகுதியில் நிலாப்பிறைபோல் ஒரு வெண்ணிறக் குறி தோன்றும்.


இதன் காய் முற்றிய பின் பழுப்பு நிரமாக மாறிக் காய்து விடும். இதை மற்ற கீரைகளுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.இதை தனியாக மருந்தாகவும் பயன் படுத்தலாம்.


இதன் இலையில் அடங்கியுள்ள சத்துக்கள் -: ஈரப்பதம்-83.3, புரதச்சத்து-4.7, கொழுப்புச் சத்து 0.6, மாவு சத்து 9.1, தாது சத்து 2.3, சக்தி-6 கலோரி முதலியவை உள்ளது. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப் படுகிறது.


முடக்கு+அறுத்தான்=முடக்கற்றான். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும்மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான்எனப் பெயர் பெற்றது.


குழந்தை பிரசவிக்கும் நேரத்தில் ஒரு சில பெண்கள் ரொம்ப கஷ்டப் படுவார்கள் இவர்கள் வேதனையைக் குறைத்து, சுகமாகசுலபமாக பிரசவிக்கச் செய்ய இந்த முடக்கற்றான் நன்கு பயன்படுகிறது.


சுகப்பிரசவம் ஆக -: முடக்கற்றான் இலையைத் தேவையான அளவுகொண்டு வந்து அதைக் காரமில்லாத அம்மியில் வைத்து மை போல்அரைத்து, பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ, களைப்போ தோன்றாது. மருத்துவமனை அருகிலில்லாத கிராமங்களில் உள்ள மருத்துவம் பார்க்கும் பெண்களும், பாட்டி மார்களும் இந்த முறையையே கையாண்டு வருகின்றனர். இது கை கண்ட முறையாகும்.


மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக -: மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால்உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம்,மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.


முடக்கற்றான் இரசம் தயாரிக்கும் முறை -: ஒரு கை பிடியளவுமுடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு சட்டியில்போட்டு ஒரு டம்ளரளவு தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம் வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து இரசம் தயாரிக்க வேண்டும்.


பாரிச வாய்வு குணமாக -: கைப்பிடியளவு முடக்கற்றான் இலையைக்கொண்டு வந்து நைத்து ஒரு சட்டியில் போட்டு இதே அளவு வேலிப்பருத்தி இலையையும், சூரத்து ஆவரையிலையையும் இத்துடன் சேர்த்துஇரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக வடிகட்டிக் காலைவேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுத்து வந்தால்பாரிச வாய்வு குணமாகும். தேவையானால் மூன்று நாட்கள் இடைவெளிவிட்டு, மறுபடி 3 நாளாக மூன்று முறை கொடுத்து வந்தால், பாரிசவாய்வு பூரணமாகக் குணமாகும்.


சுக பேதிக்கு -: ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை ஒருசட்டியில் போட்டு, வெள்ளைப் பூண்டு பற்களில் ஐந்து நைத்துஇதில் போட்டு அரைது தேக்கரண்டி அளவு மிளகை ஒன்றிரண்டாகஉடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சியகஷாயத்தை வடிகட்டி விடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால் ஒரு எலுமச்சப் பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம் சாதம்மட்டும் சாப்பிடலாம். இரவு தேவையான பதார்த்தம் சாப்பிடலாம்.
முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நீங்கும். இதன் இலையை இடித்துப் பிழிந்துஎடுத்த சாற்றினை இரண்டு துளிகள் காதில் விட்டு வர காது வலி,காதில் இருந்து சீழ் வடிவது முதலியவை நீங்கும்.


முடக்கற்றான் இலையையும், வேரையும் குடி நீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்திவர நாள்பட்டஇருமல் குணமாகும்.
சில பெண்களுக்கு மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்படாதுஇவர்கள் முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு ஒழுங்காக வரும்.


முடக்கற்றான் இலையை உலர்த்தி எடுத்த பொடியுடன், சித்திரமூல வேர் பட்டை, கரிய போளம் இவைகளையும் பொடி செய்துகுறிப் பிட்ட அளவு மூன்று நாள் அருந்தி வர மாதவிலக்கு ஒழுங்காக வரும்.


முடக்கற்றான் கொடி மல மிளக்கி செய்கை உடையது. இதன் கொடியைமுறைப்படி குடிநீரிட்டு அத்துடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்துஅருந்த மலத்தைக் கழிக்கச் செய்யும்.


முடக்கற்றான் வேரை உலர்த்தி பின்னர் முறைப் படி குடி நீர் அருந்திவர நாள் பட்ட மூல நோய் குணமாகும்.
-------------------------------------
) மூலிகையின் பெயர் -: பூவரசு.

2) தாவரப்பெயர் -: THESPESIA POPULNEA.

3) தாவரக்குடும்பம் -: LVACEAE.

4) வகைகள் -: கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும்.

5) பயன் தரும் பாகங்கள் -: இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன.

6) வளரியல்பு -: புவிக்கரசனாகிய பூவரசன் காய கல்ப மரமாகும்.வேம்பு போல நூற்றாண்டு கால மரம். மருந்துக்கு மிகவும் ஏற்றது. தென்னிந்தியாவில் அதிகமாக் காணப்படுகிறது.இதன் இலை பசுமை நிறமாகவும், அரச இலையைவிட சற்று அகலமாகவும் இருக்கும். இதன் பூமொட்டுசிறிய பம்பரம் போல் இருக்கும்.மொட்டு மலர்ந்தவுடன் புனல் வடிவில் மஞ்சள் நிறமுடையதாக மலரும். கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். காய்களை உடைத்தால் விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. பூவரசு புழுக்களைக் கொன்று நம் உடலைத் தூய்மையாக்கி உடலை உரமாக்கும் தன்மை உடையது. விதை குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் உண்டாகும்.

7) மருத்துவப் பயன்கள் -: பூவரசங்காய்களை உடைத்தால் மஞ்சள் நிறமான ஒரு திரவம் கசியும். இதனை எடுத்து அடிபட்ட காயங்கள், விஷக்கடிகள், சரும நோய்களான படர்தாமரை, செதில்படை, சிரங்கு இவைகளுக்குத் தடவி வர இளிதில் குணம் கிடைக்கும்.

உடம்பில் என்ன பூச்சி கடித்ததென்று தெரியாத காணாக்கடிகளுக்கு பூவரசு மரப்பட்டை 210 கிராம் எடுத்து இடித்து ஒரு சட்டியிலிட்டு, 1400 மி.லி. நீர் விட்டுக் காய்ச்சி மூன்றில் ஒன்றாக வற்றியபின் வடிகட்டி, தினமும் இரண்டு வேளை அருந்தி வந்தால் காணாக் கடி விஷம், பாண்டு, சோகை, பெருவயிறு முதலிய நோய்கள் குணமாகும்.

பூவரசு பட்டையை எடுத்து பாலில் அவித்து உலர்த்தி அதனுடன் சம அளவு பறங்கிப் பட்டை சேர்த்து நன்கு இடித்து சூரண்ம் செய்து கொள்ள வேண்டும். இதனைஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேவையான அளவு பசு வெண்ணெயில் காலை,மாலை இரண்டு வேளை உண்டு வந்தால் நாட்பட்ட தொழு நோய்க்கு நன்மை பயக்கும். இதை உட்கொள்ளும் போது உணவில் உப்பை நீக்க வேண்டும்.

பூவரசங்காயிலிருந்து முறைப்படி எடுக்கப்படும் எண்ணெய் பெருவயிறு, வயிற்றுப்புண் இவைகளுக்கு சிறந்த மருந்தாகும்.

பூவரசம் பட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை தேவையான அளவு உள்ளுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய் குணமாகும்.

நூறு வருடமான பூவரச மரத்தின் வேரை நன்கு உலர்த்திப் பொடி செய்து முறைப்படி உண்டு வந்தால் தொழுநோய் குணமாகும்.

வெண்குஷ்ட நோயால் உதட்டில் ஏற்பட்ட வெண்புள்ளிகளைப் போக்க பூவரசின் முதிர்ந்த பட்டையை இடித்துப் பிழிந்த சாற்றினை வாயிலிட்டு அடிக்கடி கொப்பளிக்க வேண்டும். இது போல் பல தினங்கள் கொப்பளித்து வரவேண்டும். அந்தச் சாற்றை விழுங்கி விட்டால் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும்.

இதன் பழுப்பு இலையை உலர்த்திக் கருக்கித் தேங்காய் எண்ணெயில் கலந்து போட சொறிசிரங்கு, கரப்பான்,ஊரல், அரிப்பு குணப்படும்.

இலைகளை அரைத்து வதக்கிக் கட்ட வீக்கம் குறையும்.

100 ஆண்டுகள் சென்ற மரத்தின் காய், பூ, பட்டை ஆகியவற்றைச் சமனளவு பொடித்துக் காலை, மாலை 1 தேக்கரண்டி நீண்ட நாள் சாப்பிட்டுவரத் தோல் வியாதிகள் அனைத்தும் தீரும்.

பூவரசன் பட்டைத்தூள் 100 கிராம், சீமைக்காசிக்கட்டி 100 கிராம், இந்துப்பு 100 கிராம், சேர்த்து அரைத்து வைக்கவும்.குழந்தை வேண்டாம் என்பவர்கள் கருத்தடைக்காக இதனைச் சாப்பிடலாம். விலக்கான நாள் முதல் ஏழு நாள் 10 கிராம் அளவு வெந்நீரில் குடிக்கவும். ஏழு நாளும் பால், மோர், மிளகு ரசம், பருப்புத் துவையல் மட்டும் சாப்பிடவும். நல்லெண்ணெயில் தலை முழுகவும். இதனால் கருப்பை சுருங்கிவிடும்.. ஒரு வருடம் வரை கரு தரிக்காது நல்ல கருத்தடை முறை இது.
பூவரசம் வேர்ப்பட்டையை நீர் விட்டுக் காய்ச்சி 50 மி.லி.யுடன் 10 மி.லி. ஆமணக்கெண்ணெய் சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடிக்க பேதியாகும். பேதி நிற்க மோர் குடிக்கவும். இதனால் சொறி, சிறங்கு, படை நோய்கள் குணமாகும்.

‘ நூறாண்டு சென்றதொரு நுண் பூவரசம் வேர்
நூறாண்டு குட்டைத் தொலைக்குங்காண்-வீறிப்
பழுத்த இலை, விதை, பூ, பட்டை இவை கண்டால்
புழுத்த புண் விரேசனமும் போம்.’

‘குட்டும், கடி, சூலை கொல்லும், விடபாகம்
துட்ட மகோதரமும், சோபையொடு-கிட்டிமெய்யில்
தாவு கரப்பான் கிரந்திதன் மேகம் போக்கிடும்
பூவரசன் காய் பட்டை பூ.’
------------------------------------------ கும்பமுனி.

‘பெற்றோர்தந்த ரோகங்கள் பிழையால் பெற்ற பாழ் நோய்கள்
பற்றியதொழுநோய் புண்புரைகள் படர்தாமரை கரப்பான்
முற்றும்பற்றாதோடி வடும் பூவரசென்னும் மூலிகையால்
சற்றே பிள்ளை பேற்றுக்கும் தாழ்பாளாகும் பூவரசே.’
1) வேறுபெயர்கள் -: வச்சிரவல்லி.

2) தாவரப்பெயர் -: VITIS QUADRANGULARIS.

3) தாவரக்குடும்பம் - :VITACEAE.

4) வகைகள் -:முப்பிரண்டை, சதுரப்பிரண்டை, மூங்கில்பிரண்டை அல்லது கோப்பிரண்டை, உருண்டைப்பிரண்டை, களிப்பிரண்டை, புளிப்பிரண்டை, தீப்பிரண்டை.

5) வளரும் தன்மை -: பொதுவாக இது வெப்பமான இடங்களில் வளர்கிறது. கொடிவகையைச் சார்ந்தது. இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது. சதைப்பற்றான நாற்கோண வடிவத்தண்டுகளையுடைய ஏறு கொடி, பற்றுக்கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டிருக்கும் சாறு உடலில் பட்டால் நமச்சல் ஏற்படும் சிவப்பு நிற உருண்டையான சிறியசதைக் கனியுடையது விதை. கொடி மூலம் இனப்பெருக்கம் செய்யப்படிறது, இதில் ஆண் பிரண்டை, பெண் பிரண்டை எனஇரு வகைப்படும். பெண் பிரண்டையின்கணு 1 முதல் 1 1\2 அங்குலமும் ஆண்பிரண்டையின் கணுவு 2 முதல் 3 அங்குலமும் இருக்கும். இலைகள் முக்கோண வடிவில் முள் இல்லாமல் பெரிதாக இருக்கும், காரத்தன்மையும். எரிப்புக் குணமும், மைக்ககும் இயல்பும்உடையது.

6) பயன்தரும் பாகங்கள் -: வேர் தண்டு ஆக்கியவை

7) பயன்கள் -: இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த குணமுடையது.

பிரண்டை உப்பு -: பிரண்டையை உலர்த்தி எடுத்துச் சாம்பலாக்க வேண்டும். ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து வடிகட்டிஅரை நாள் தெளிய வைக்க வேண்டும் தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 -10 நாள் வெய்யலில் காயவைக்கவும் நீர் முழுதும் சுண்டி உலர்ந்தபின் படிந்திருக்கும் உப்பினை சேர்த்து வைக்கவும்.

பேதி, வாந்தி -: குழந்தைகளுக்கு வரும் வாந்திபேதிக்கு ஒரு கிராம் அளவு பாலில் இந்த உப்பைக் கரைத்து மூன்று வேளை கொடுக்க குழந்தை வாந்தி பேதி குணமாகும். செரியாமை குணமடையும். பெரியவர்களுக்கு 2 -3 கிராம் வடித்த கஞ்சியில், மோரில் கொடுக்கவும்.

வாய்ப்புண் - :வாய் புண், வாய் நாற்றம், உதடு, நா வெடிப்பு ஆகியவற்றிக்கு 2 கிராம் வெண்ணெயில் இரு வேழை மூன்று நாள் கொடுக்க கணமாகும்.

வயிற்றுப்புண் -: தீராத வயிற்றுப்புண், குன்மக்கட்டி, வயிற்று வலி ஆகியவற்றிக்கு இதன் உப்பை 48 - 96 நாள் இரு வேழை சாப்பிட குணமாகும்.

மூலம் -:நவ மூலமும், சீழ்ரத்தம் வருதல், அரிப்பு, கடுப்பு, ஆசனவாயில் எரிச்சல் இருந்தாலும் இந்த உப்பை 3 கிராம் அளவு வெண்ணெயில் 24 -48 நாள் இரு வேழை கொடுக்க குணமாகும்.

பிரண்டை பற்பம் - : 300 கிராம் பிரண்டை100 கிராம் உப்புடன் ஆட்டி அடைதட்டிமண் குடுவையில் வைத்துச் சீலைமண் செய்துபுடம் போட்டு எடுக்க சாம்பல் பற்பமாகமாறி இருக்கும் உப்பைப் போலவே எல்லா நோய்களுக்கும் இந்த பஸ்பத்தைக் கொடுக்கலாம்.

உடல் பருமன் -: பிரண்டை உப்பை 2 - 3 கிராம் பாலில் கொடுத்துவர இரு திங்களில் உடல் பருமன் குறைந்து விடும். ஊளைச் சதைகளையும் குறைக்கும்.

ஆஸ்துமா -: இந்த உப்பை தென்னங்கள்ளில் கொடுத்துவர ஆஸ்துமா, எலும்புருக்கி, மதுமேகம், நீரிழிவு குணமடையும்.

சூதகவலி - : மூன்று வேழை 2 கிராம் நெய்யில் கொடுக்க சூதகவலி குணமடையும்.

தாதுநட்டம் -: பிரண்டை உப்பை 2 கிராம் அளவு ஜாதிக்காய்த் தூள் 5 கராமுடன் கலந்து சாப்பிட்டு வர தாது நட்டம் குணமடையும். வீரியம் பெருகும், உடம்பு வன்மை பெரும்.

செரியாமை -: பிரண்டை இலையையும், தண்டையும் உலர்த்தி, இடுத்து சூரணம் செய்து கொண்டு அதனோடு சுக்குத்தூள், மிளகுத்தூள் சமஅளவாக எடுத்துக்கொண்டு உள்ளுக்குக் கொடுத்துவர செரியாமை தீரும். இதனை கற்கண்டுகலந்த பாலுடன் உட்கொண்டுவரு உடலுக்கு வன்மை தரும்.

நெய்விட்டு பிரண்டைத்தண்டை வறுத்து துவையலாக அரைத்து உண்டு வர வயிற்றுப் பொருமல் சிறு குடல் பெருகுடல் புண் நீக்கி நல்ல பசிஉண்டாகும்.
பிரண்டைத் தண்டை நெய்விட்டு வறுத்து அரைத்து கொட்டைப பாக்களவு வீதம் தினம் இரு வேழையாக எட்டு நாட்கள்உட் கொண்டு வந்தால் மூல நோயில்உண்டாகும் நமச்சலும், குருதி வடிதலும் நிற்கும்.

காதுவலிக்கும், காதில் சீழ்வடிதலுக்கும் பிரண்டையை தீயில் வதக்கி சாறு பிழிந்துஇரண்டு துளி காதில் விட்டு வர குணம் தெரியும். மூக்கில் வடியும் ரத்தம் நிற்கஇந்தச் சாற்றை இரண்டு அல்லது மூன்றுதுளி மூக்கில் விடலாம், இந்தச் சாற்றையே தகுந்த அளவில் உள்ளுக்குக் கொடுத்து வரபெண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும்.


பிரண்டை, பேரிலந்தை,வேப்ப ஈர்க்கு,முருங்கன் விதை, ஓமம் இவைகளை சமளவு எடுத்து கஷாயமிட்டு அருந்தி வர, வயிற்றில் உள்ள வாயு நீக்கி வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி நல்ல பேதி ஏற்படும்.

முறிந்த எலும்பு விரைவில் சேர்வதற்கு இதன்வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் வீதம் உண்டு வரலாம் இதனை வெந்நீரில் குழைத்து பற்றிட்டும் வரலாம்.


பிரண்டைத் தண்டை எடுத்து சுண்ணாம்பு தெளி நீரில் ஊரவைத்து வேழைக்கு ஒன்றாக உட்கொண்டு வந்தால் நல்ல பசி ஏற்படும்.

பிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் புளியையும் உப்பையும் கூட்டிக்காச்சி, குழம்பு பதத்தில் இறக்கி பற்றிட்டு வந்தால் சுளுக்கு, கீழே விழுந்து அடிபடுதல், சதை பிரளுதல், வீக்கங்கள் குணமடைந்து நல்ல பலன் கிடைக்கும்.
) மூலிகையின் பெயர் -: தொட்டால் சிணுங்கி.

2) தாவரப்பெயர் -: MIMOSA PUDICA.


3) தாவரக்குடும்பம் -: FABACEAE.

4) வேறு பெயர்கள் -: நமஸ்காரி மற்றும் காமவர்த்தினி. (Touch-me-not)

5) பயன் தரும் பாகங்கள் -: இலைகள் மற்றும் வேர்கள்.

6) வளரியல்பு -: தொட்டால் சிணுங்கி தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் ஈரப்பதமான இடங்களில் தானே வளரக் கூடியது. இது தரையில் படர்ந்து 5 அடி வரை படரும் அதே சமயம் இது 60 செ.மீ. உயரமும் இருக்கும். சிறு செடி வகையைச் சார்ந்தது. ஆற்று ஓரங்களில் அதிகமாகக் காணப்படும். சிறு முட்கள் இருக்கும். இலைகள் ஜோடியாக எதிர் அடுக்கில் கூட்டாக இருக்கும். ஒவ்வொரு கிளைக்கும் சுமார் 10-25 எதிர் அடுக்கு இலைகள் உள் நோக்கி இருக்கும். இலைகள் இடையில் ஊதா நிறப் பூக்கள் மேலே சிவப்பாகவும் அடியில் ஊதா நிறத்திலும் இருக்கும் பூவில் குச்சிகள் ஒரு செ.மீ. நீளத்தில் சிலிர்த்துள்ளது போல் இருக்கும். காய்கள் 2.5 மி.மி. நீளத்தில் இருக்கும். பூக்கள் காற்று மூலமும் பூச்சிகள் மூலமும் மகரந்தச் சேர்க்கை ஏற்படும். இதன் இலைகள் மாலைக்கு மேல் உட்பக்கமாக மூடிக்கொள்ளும். சூரிய உதையத்தின் போது மறுபடியும் தெளிந்து கொள்ளும். மனிதர்கள் தொட்டாலும், அதிர்வு ஏற்பட்டாலும் தொடர்ச்சியாக இலைகள் மூடிக்கொள்ளும். இதனை ஆங்கிலத்தில் ‘Touch-me-not’ என்றும் சொல்வார்கள். மூடிய இலைகள் பகலில் அரை மணி நேரம் கடந்து விரிந்து கொள்ளும். இதன் பூர்வீகம் வட அமரிக்கா மற்றும் மத்திய அமரிக்கா. பின் இது தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, பசிபிக் தீவுகள், ஆஸ்திரேலியா, நைஜீரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் பரவியது. இது விதை மூலம் இனப் பெருக்கும் செய்யப்படுகிறது.

7) மருத்துவப்பயன்கள்-: ‘நமஸ்காரி’ என்ற இந்த மூலிகை காந்த சக்தி உடையது. தெய்வீக மூலிகையுமாம். தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல் பெருகி மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்கும். நினைத்தது நடக்கும். மனதில் உணர்ச்சி ஊட்டி சிற்றின்பத்தை மிகுவிக்கும். அதனால் ‘காமவர்த்தினி’ என்றும் கூறுவர். மாந்திரீகத் தன்மை உடையது.

“பகரவே இன்னமொரு மூலிகேளு
பாங்கான சிணுங்கியப்பா காப்புக்கட்டிநிகரவே
பூசையிடு மந்திரத்தால் நினைவாக
உத்தமனே தூபமிட்டு வைத்துக் கொள்ளே.”

என்பது ஒரு பழம் பாடல், இதன் வேரை வழிபாடு செய்து பிடுங்கி மாந்திரீகம் செய்யப் பயன்படுத்துவர்.

இதன் இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் கரையும். கீழ்வாதம் கரையும்.

இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும். சிற்றின்பம் பெருகும். 10-20 நாள் சாப்பிட வேண்டும்.

சூடு பிடித்தால் சிறுநீர்த் தாரை எரியும். இதற்கு இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும். ஆண்மை பெருக இரவு பாலில் 15 கிராம் கலந்து சாப்பிட வேண்டும். சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும் . வயிற்றுப்புண்ணும் ஆறும்.

வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலிகை என்பதால் துளசி போல வீட்டில் வைக்கலாம். நாளும் தொட வாய்ப்பாகும். மாத விலக்காகும் பெண்கள் இச்செடியின் அருகில் செல்லக் கூடாது, தொடுதலும் கூடாது.

‘மேகநீரைத்தடுக்க மேதினியிற் பெண்வசிய
மாகவுன்னி னல்கு மதுவுமன்றி-தேகமிடைக்
கட்டாகக் காட்டுகின்ற சாலை துரத்திலிடுந்
தொட்டாற் சுருக்கியது சொல்.’

குணம்- தொட்டாற் சுருங்கி மேகமூத்திரத்தை நீக்கும், பெண் வசியம் செய்யும், உடலில் ஓடிக் கண்டுகின்ற வாதத் தடிப்பைக் கரைக்கும் என்க.

உபயோகிக்கும் முறை -: ஒரு பலம் தொட்டாற்சுருங்கி வேரைப பஞ்சுபோல் தட்டி ஒரு மட் குடுவையில் போட்டு கால் படி சலம் விட்டு அடுப்பிலேற்றி வீசம் படியாகசுண்ட, வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற சலம் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும் . இவற்றால் நீர் அடைப்பு, சல்லடைப்பு தீரும். இதன் இலையையும் வேரையும் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு விராகனெடை பசுவின் பாலில் போட்டுக் கொடுத்துக் கொண்டு வர மூலம், பவுத்திரம் போம். இதன் இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும். இதன் இலையை மெழுகு போலரைத்து விரை வாதம், கை,கால் மூட்டுக்ளின் வீக்கம் இவைகட்கு வைத்துக் கட்ட குணமாகும். இதன் இலைச் சாற்றைப் பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களுக்கு உட செலுத்தி வைக்க ஆறிவரும். இதன் இலையை ஒரு பெரிய மட் கடத்தில்போட்டுச் சலம் விட்டு வேக வைத்து இடுப்பிற்குத் தாளும் படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு வலி, குண்டிக் காய்வலி நீங்கும்.

1) வேறு பெயர்கள்: தூதுவளை, தூதுளம், தூதுளை

2) தாவரப் பெயர்கள்: Solanum Trilubatum; Solanaceae

3) வளரும் தன்மை: தமிழகம் எங்கும் தன்னிச்சையாக வளர்கிறது. வீட்டுத் தோட்டத்திலும் வளர்ப்பதுண்டு. சிறகாக உடைந்த முள்ளுள்ள இலைகளையும், ஊதாநிறப் பூக்களையும், உருண்டையான பச்சை நிறக் காய்கள் சுண்டைக் காய் மாதிரி இருக்கும். சிவப்புப் பழங்களையும் வளைந்த முட்கள் நிறைந்த தண்டினையும் உடைய ஏறு கொடி. இது விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

4) பயன்படும் உறுப்புகள்: வேர் முதல் பழம் வரை எல்லா பாகமும்.

5) பயன்கள்: இதன் பயனை வள்ளளார் கூறும்போது “அறிவை விளக்குவதற்கும் கவன சக்தி உண்டு பண்ணுவதற்கும் கரணம் ஓய்வதற்கும் கபத்தை எரிப்பதற்கும் யோக்யதையுடைய ஒளஷதி தூதுவேளை தேகக் கெடுதியாகிய அசுத்தம் நீக்கி தேகம் வலிவுள்ளதாக நெடு நாளைக்கு இருக்கும். முக்தி அடைவதற்குச் சகாயமாயிருக்கும். மகான்களிடத்தில் அனந்த காலம் காத்திருந்தாலும் மேற்குறித்த மூலிகையின் பிரயோஜனத்தையும் உண்மையையும் அனுபவத்தையும் அவர்கள் வெளியிடமாட்டார்கள்”.

இலை கோழையகற்றும், உடல் தேற்றிக் காமம் பெருக்கும். பூ உடலுரமூட்டும் காமம் பெருக்கும். காய் கோழையகற்றிப் பசியைத் தூண்டி மலச்சிக்கல் அறுக்கும். பழம் கோழையகற்றும்.

தூதுவேளை இலையைப் பிழிந்து எடுத்து சாற்றை 1 அல்லது 2 துளி காதில் விட்டால் காதுவலி, காதில் சீழ் வடிதல் ஆகியவை குணமடையும்.

இலையை நெய்யில் வதக்கி துவையலாக குழம்பாகக் கடைந்தோ சாப்பிட கபக் கட்டு நீக்கி உடல் பலமும் அறிவுத் தெளிவும் உண்டாகும்.

இலைச் சாற்றை சம அளவு நெய்யில் காய்ச்சிக் காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டுவர என்புருக்கிக் காசம் மார்புச் சளி நீங்கும்.

காயை உலர்த்தித் தயிர், உப்பு ஆகியவற்றில் பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உண்டுவரப் பயித்தியம், இதய பலவீனம், மலச்சிக்கல் ஆகியவை நீங்கும்.

சமூலத்தை (வேர், இலை, பூ, காய்) 50 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு நான்கில் ஒன்றாகக் காய்ச்சி காலை மாலை பருகி வர இரைப்பு, சுவாச காசச் சளி ஆகியவகை தீரும்.

ஆஸ்துமா மூச்சுத் திணறலில் பழத்தூளைப் புகைபிடிக்கச் சளி இளகி குணப்படும்.

நாள்தோறும் 10 பூவைக் காய்ச்சிப் பால், சர்க்கரைக் கூட்டி ஒரு மண்டலம் (45 நாட்கள்) பருக உடல் பலம், முக வசீகரம், அழகும் பெறலாம்.

தூதவேளை, கண்டங்கத்திரி, பற்படாகம், விஷ்ணுகாந்தி வகைக்கு ஒருபிடி ஒரு லிட்டர் நீரில் போட்டு 8-ல் ஒன்றாய் காய்ச்சி (தூதுவேளைக் குடிநீர்) ஒரு மணிக்கு ஒருமுறை 5 மி.லி முதல் 10 மி.லி வரை கொடுத்து வரக் கப வாதச் சுரம் (நிமோனியா) சன்னி வாதச் சுரம் (டைபாய்டு) குறையும்.

தூதுவேளை இலையில் ரசம் வைத்துச் சாப்பிடலாம். தூதுவேளை தோசை சாப்பிடலாம். தூதுவேளை கசாயம் குடிக்கலாம்.

தூதுவேளை, கண்டங்கத்திரி, திப்பிலி, இண்டு வேர் சேர்த்து 500 மி.லி தண்ணீர் ஊற்றி 100 மி.லி ஆக சுண்ட வைத்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா குணமடையும்.

தூதுவேளை உடல்வலிக் கோளாறு, நுரையீரல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.
துத்தி.


1) வேறுபெயர்கள் -: கக்கடி, கிக்கசி, துத்திக்கீரை.


2) தாவரப்பெயர் -: ABUTILON INDICUM.


3) தாவரக்குடும்பம் -: MALVACEAE.


4) வகைகள் -: பசும்துத்தி, கருந்துத்தி, சிறுத்துத்தி, பெருந்துத்தி, எலிச்செவிதுத்தி, நிலத்துத்தி, ஐயிதழ்துத்தி, ஒட்டுத்துத்தி, கண்டுத்துத்தி, காட்டுத்துத்தி,கொடித்துத்தி, நாடத்துத்தி, பணியாரத்துத்தி, பொட்டகத்துத்தி, பலன் எல்லாம் ஒன்றே.


5) தாவர அமைப்பு -: இது கீரை வகையைச் சேர்ந்தது. ஆனால் இதனைப் பெரும்பாலும்எவரும் சமையலுக்குப் பயன்படுத்துவதில்லை.மற்ற கீரைகளைப் போலவே பொரியல் சமையல்செய்து சாப்பிடலாம். இது உடல் நலத்திற்குபாதுகாப்பானது. இதைய வடிவ இலைகளையும்அரச இலை போன்று ஓரங்களில் அறிவாள்போன்று இருக்கும். மஞ்சள் நிற சிறு பூக்களையும்தோடு வடிவக் காய்களையும் உடைய செடி.இலையில் மென்மையான சுவையுண்டு, உடலில்பட்டால் சற்றே அரிக்கும். தமிழகத்திலுள்ளஎல்லா மாவட்டங்களிலும், உஷ்ண பிரதேசங்களில் தானே வளர்கிறது. நான்கையிந்தடிஉயரம் வரை வளரும். விதைமூலம் இனப்பெருக்கம்அடைகின்றது.
6) பயன் தரும் பாகங்கள் -: இலை, பூ, வேர்,பட்டை, ஆகியவை மருத்துவப் பயனுடையவை.


7) மருத்துவப்பயன்கள் -: துத்தி உடலிலுள்ளபுண்களைஆற்றி, மலத்தை இளக்கி உடலைத் தேற்றுகிறது.


துத்தி இலையைக் கொண்டுவந்து மண் பாண்டத்தில் போட்டு விளக்கெண்ணெய் ஊற்றி நன்றாகவதக்கி கை பொருக்கும் சூட்டில் வாழை இலைஅல்லது பெரிய வெற்றிலையில் வைத்து கோவணம்கட்டுவது போன்று துணியைவைத்துக் கட்டிக்கொள்ள வேண்டும். இது போன்று தினசரி இரவு படுக்கைக்கு முன்னர் செய்து வந்தால் மூலவீக்கம், வலி, குத்தல், எரிச்சல் ரத்த மூலம், கீழ்மூலம்ஆகியவை நீங்கி நலம் உண்டாகும்.


துத்தி இலை வேர் முதலியவற்றை முறைப்படிகுடிநீரிட்டு பல் ஈறுகளிலிருந்து ரத்தம் வருபவர்கள்வாய் கொப்பளித்து வர ரத்தம் வடிவது நிற்கும்.


உடலில் ஏற்படும் வலிகளுக்கு துத்தி இலையைகொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து அந்நீரில்துணியை முக்கி ஒற்றடமிட்டு வந்தால் வலிகுணமாகும்.


கழிச்சல் இருப்பவர்கள் துத்தி இலையின் சாறுஇருபத்தினான்கு கிராம் நெய் பன்னிரண்டு கிராம்கலந்து உட்கொண்டு வந்தால் குணமாகும்.


ஆசன வாய்க் கடுப்பு, சூடு முதலியவற்றால்பாதிக்கப்பட்டவர்கள் துத்தி இலைக் குடிநீருடன்பாலும் சர்க்கரையும் கலந்து உட்கொண்டு வர நலம் தரும். மலத்தை இளக்கும்.


துத்தி இலையை பருப்புடன் சேர்த்து உண்டுவந்தால் மூலச்சூடு நீங்கும்.
எழிதில் பழுக்காத கட்டிகளின் மீது துத்தி இலையைஇடித்துப் பிழிந்த சாற்றை அரிசி மாவுடன் கலந்துகளியாகக்கிண்டி கட்டிகளின் மீது பூசி, கட்டிவந்தால் அவை எளிதில் பழுத்த உடையும்.


இரத்தவாந்தியால் துன்பப்படுபவர்கள் துத்திப்பூவை நன்கு உலரவைத்து சூரணம் செய்துதேவையான அளவு பாலும் கற்கண்டும்சேர்த்து அருந்தி வந்தால் ரத்த வாந்தி நின்றுஉடல் குளிர்ச்சியாகும். ஆண்மையையும்இது பெருக்கும்.


துத்திப் பூவை உலர்த்தி பொடி செய்து சம அளவுசர்க்கரை கலந்து பசும் பாலுடன் அருந்தி வந்தால்நுரையீரல் கபம், இருமல், இரைப்பு, காசநோய்இரத்த வாந்தி, முதலியவை குண்மாகும்.


துத்தி விதைகளைப் பொடித்து சர்கரையுடன்கலந்து இருநூற்று ஐம்பது மி.கி. முதல் ஐநூறுமி.கி. அளவு உண்டு வந்தால் சரும நோய்கள்உடல் சூடு, தொழுநோய், கருமேகம், வெண்மேகம், மேகஅனல் முதலியவை கட்டுப்படும்.


வெள்ளைபடுதல் நோய், மூலம் உடையவர்கள்இதன் விதையைக் குடிநீர் செய்து முப்பது முதல்அறுபது மி.லி. அருந்தி வரலாம்.



துத்தி வேர் முப்பத்தயிந்து கிராம் திராட்சைப்பழம் பதினேழு கிராம் நீர் எழுநூறு மி.லிசேர்த்து நன்கு காச்சி நூற்று எழுபது மி.லிஆக வற்ற வைத்து வடிகட்டி காலை மாலைஇரு வேளையும் முப்பது முதல் அறுபது மி.லி. அருந்தி வந்தால் தாகம், நீரடைப்பு, மேகச்சூடு, முதலியவை குணமாகும்.


துத்தி விதைகளைப் பொடிசெய்து சம அளவுகற்கண்டுப் பொடிகலந்து அரை முதல் ஒரு கிராம் இரண்டு வேளை நெய்யுடன் குழைத்துஉண்டு வந்தால் வெண்புள்ளி நோய் குண்மாகும்.


துத்தி வேரை உலர்த்தி பொடி செய்து மூன்றுகிராம் முதல் ஐந்து கிராம் வீதம் தினமும்பாலில்சேர்த்துக் குடித்து வர மூலச் சூடுதணியும்.


வாயு சம்பந்தப் பட்ட வியாதிகளுக்கும் இடுப்புவலி, பழைய மலத்தினால்உண்டாகும் பூச்சிகள்ஒழிய இந்தக் கீரையை அடிக்கடி கடைந்தோபொரியல்செய்தோ உணவுடன் சேர்த்துக் கொண்டு வந்தால் யாவும் குண்மடையும்.


எலும்பு முறிவு ஏற்பட்டால், முதலில் எலும்பைஒழுங்கு படுத்திக் கட்டிக் கொண்டு இந்த இலையை நன்றாக அரைத்து மேலே கனமாகப்பூச அதன்மேல் துணியைச்சுற்றி அசையாமல்வைத்திருந்தால்வெகு விரைவில் முறிந்தஎலும்பு கூடி குணமாகும்.


துத்தி இலையை நன்றாக அரைத்துக் கசக்கிசாறு எடுத்துக்கொண்டு அந்தச்சாற்றுடன்தேங்காய் எண்ணெய் சேர்த்து நீர் சுண்டும்அளவு நன்றாக க்காச்சி வடிகட்டிப் பாட்டிலில்வைத்துக் கரப்பான் கண்ட குழந்தைகளுக்குதடவி வந்தால் இந்நோய் குணமாகும்.


குடற்புண்ணால் வேதனைபடுகின்றவர்கள்துத்தி கஷாயத்தை தினசரி மூன்று வேளைசர்கரை கலந்து குடித்து வந்தால் பூரண குணம்பெறலாம். தவிர நீர்சுளுக்கு, தொண்டை கம்மல்சொரிசிரங்கு உள்ளவர்கள்இந்தக் கஷாயத்தைக்குடித்து குணமடையலாம் ------------------------(

1)வேறுபெயர்கள்- செம்பரத்தை, ஷுப்ளவர், சீன
ஹைபிஸ்கஸ்.

2)தாவரப்பெயர்- HIBISCUS ROSASINENSIS.

3)குடும்பம்- MALVACEAE.

4)வளரும் தன்மை-எல்லா வகை இடங்களிலும்
நன்றாக வளரும். இது சீன நாட்டிலிருந்து வரப்பெற்ற செம் பருத்தி. அழகுச்செடி எனப் பல தோட்டங்களில் இந்தியா முழுவதிலும் பயிறடப்படுகிறது இது 5-10 அடி உயரம் வரை வளரவல்லது. இதன் இலைகள்
பசுமையாகவும் ஓரங்களில் அரிவாள் போன்ற பற்க
ளுடனும் இருக்கும். செம்பரத்தையின் மொட்டுக்கள்
சிவப்பு நிறமாக நீண்டு இருக்கும்.விரிந்ததும் ஐந்து
இதழ்களை உடையதாகவும் நடுவில் குழல் போன்று
மகரந்த தாளையும் கொண்டிருக்கும். இதில் பல வகை
கள் உள்ளன. பொதுவாகப் பல அடுக்குகளையுடைய
அடுக்குச்செம்பருத்தியையும் காணலாம். துவர்ப்பும்.
பசையும் உடைய பூவில் தங்கச்சத்து உள்ளது.இதை
இனப்பெருக்கம் செய்ய நன்றாக முதிர்ச்சி அடைந்த
அரை அடி நீளமுள்ள தண்டுக் குச்சிகளை நாற்றங்
காலில் நட்டு வேர் பிடிக்கச்செய்ய வேண்டும் 90
நாட்களில் குச்சிகள் வேர்பிடித்துவிடும்.

5)வகைகள் -கோ 1, திலகம் சிகப்பு நிறப்பூக்கள்,
கோ 2, புன்னகை, மஞ்சள் நிறப்பூக்கள் , அடி
பாகத்தில் சிகப்பு நிறங்கொண்ட மஞ்சள் நிறப்
பூக்கள்.

6)பயன்தரும் பாகங்கள் - பூக்கள், இலைகள், பட்டை
மற்றும் வேர்கள்.

7)பயன்கள் - செம்பருத்திப்பூ பூஜைக்கு மலராகப்
பயன் படுகிறது. சிவந்த நிறமுடைய பூவே சிறந்த
பலன் உடையது. இது வெப்பு அகற்றிக் காமம்
பெருக்கும் செய்கையுடையது. கூந்தல் வளர்ச்சிக்கு
மூலிகை ஷாம்பு தயார்செய்ய பயன்படுகிறது. இது
கருப்பை கோளறுகள் உதிரப்போக்கு , இருதய நோய்
ரத்தஅழுத்த நோய் குணமடையப் பயன்படும்.

அழலை, இரத்தபித்தம், தாகம்,பேதி, வயிற்றுக்
கடுப்பு, விந்துவை நீற்றும், மேகம், விசுசி வேட்டை
போம். தேகவாரேக்கியம், விழியொளியும் உண்டாம்.

செம்பையிலைக்கட்டி, ஜந்நி, தினவு, துடைவாழை,
நீர்ரேற்றம், பிளவை, பீநாசங்கள், புண்புரை, மேகம்,
வாதகபம், விப்புருதி, விரணம், வீக்கம், வெடித்த
புண், புரைகளும் போம்.

பூவை நீரிட்டுக்காச்சி வடிகட்டிப்பாலும் சர்கரையும்
சேர்த்து காலை மாலை பருக மார்புவலி, இதய
பலவீனம் தீரும். காப்பி, டீ புகையிலை நீக்க
வேண்டும்.

பூவை உலர்த்திப் பொடித்துச் சம எடை மருதம்
பட்டைத்தூள் கலந்து பாலில் காலை மாலை பருக
இதயபலவீனம் தீரும்.

பூவை நல்லெண்ணையில் காச்சி தடவ முடி வளரும்.
செம்பரத்தை வேர்ப்பட்டை, இலைந்தை மரப்பட்டை
மாதுளம் பட்டை சம அளவு சூரணம் செய்து 4
சிட்டிகை காலை மாலை சாப்பிட பெரும் பாடு
தீரும்.

செம்பரத்தம் பூ 500 கிராம் அம்மியில் நெகிழ
அரைத்து அதில் ஒரு கிலோ சர்க்கரையைப்
போதிய நீர்விட்டுக் கரைத்து வடிகட்டிக்கலந்து
சிறுதீயில் எரித்துக்குழம்புப் பதமாக்கி (செம்பரத்தை
மண்ப்பாகு) வைத்துக்கொண்டு 15 மி.லி.யாகக்
காலை மாலை சாப்பிட்டு வர உட் சூடு, நீரெருச்
சல், உள்ளுறுப்புகளில் உள்ள புண், ஈரல்
வீக்கம், நீர்கட்டு ஆகியவை தீரும்.

இந்தப்பூவின் கசாயத்துடன் மான் கொம்பு பற்பம்
ஒரு கிராம் அளவு சேர்த்து 10-20 நாள் சாப்பிட
இதயத்துடிப்பு ஒழுங்கு படும். படபடப்பு
இருக்காது. குருதி தூய்மையாகும். குருதி மிகுதி
யாக உற்பத்தியாகும். பாரிச வாய்வும் குணமாகும்.
இதன் மகரந்தக் காம்பு உலர்திய தூள் 5 கிராம்
பாலில் சாப்பிட மலடு நீங்கும்.

தஙகச்சத்து இப்பூவில் இருப்பதால் தாதுவிருத்திக்கு
மிகவும் சிறந்ததாகும். நாழும்10 பூவினை மென்று
தின்று பால்அருந்தினால் நாற்பது நாளில் தாது
விருத்தி ஏற்படும். நீர்த்துப்போன விந்து கெட்டி
படும், ஆண்மை எழுச்சி பெறும். உலர்த்திய பூ
சூரணத்துடன் முருங்கைப்பூ அல்லது விதை
உலர்த்திய தூளும் சேர்த்துச்சாப்பிட்டு வந்தால்
ஆண்மை குறைபாடு நீங்கும்.................இன்பம்
நீடிக்கும்.---------------
சிறுபீளை.


1) மூலிகையின் பெயர் -: சிறுபீளை.


2) வேறுபெயர்கள் -: சிறுகண்பீளை, கண் பீளை, கற்பேதி,பெரும் பீளை என்ற இனமும் உண்டு.


3) தாவரப்பெயர் -: AERVALANATA.


4) தாவரக்குடும்பம் -: AMARANTACEAE.


5) தாவர அமைப்பு -: இது சிறு செடிவகையைச் சார்ந்ததுஇந்தியாவில் ஈரப்பாங்கான இடங்களில் பரவலாக வளர்கிறது.இதன் இலைகள் சிறியதாக நீள் வட்டவடிவில் இருக்கும்,ஒவ்வொரு இலைக்கும் இடையில் பூக்கள் இருக்கும்,பூக்கள் தண்டுடன் ஒட்டி அவல் போன்ற வடிவமாக இருக்கும்.


6) பயன் படும் பாகங்கள் -: சிறு பீளையின் எல்லாபாகமும்மருத்துவதற்குப் பயன்படுத்தப் படுகிறது.


7) செய்கை -: இது சிறு நீரைப் பெருக்கி, கற்களை கரைக்கும்செய்கை உடையது.


8) மருத்துவப் பயன்கள் -: சிறுபீளைச் செடிக்குத் தேகம் வெளிறல், அசிர்க்கா ரோகம், வாத மூத்திரக் கிரிச்சபம் முத்தோஷம், மூத்திரச் சிக்கல், அஸ்மரி, அந்திர பித்த வாதும் சோனித வாதங்கள் ஆகியன போம் என்க.


சிறு கண் பீளை இலையை இடித்து சாறு எடுத்து பதினைந்து மி.லி.வீதம் மூன்று வேளை அருந்தி வரநீர் எரிச்சல், நீரடைப்பு, பெண்களுக்கு மாதவிலக்கின் போது உண்டாகும் அதிகமான ரத்தப் போக்கு முதலியவை குணமாகும்.


கருத்தரித்த பெண்களுக்கு ஏற்படும் தளர்ச்சியை நீக்கி உடலுக்கு வன்மை கொடுக்க இதன் வேரைக் கொண்டு செய்யப்படும் கஞ்சி நல்லது.


சிறுகண் பீளை வேர்ப்பட்டையையும், பனைவெல்லத்தையும் சம அளவாக எடுத்து நன்கு அரைத்து இருநூறு மி.லி.பசும் பாலுடன் கலந்து தினந்தோறும் இரண்டு வேளை அருந்தி வந்தால் நீரடைப்பு, கல்லடைப்பு, முதலிய நோய்கள்குணமாகும்.


சிறுகண் பீளையின் எல்லா பாகங்களையும், பேராமுட்டிவேர், நாகலிங்க வேர், சிறுநெருஞ்சில், இவைகளையும்சம அளவாக எடுத்து, தேவையான அளவு நீர்விட்டுக்காய்ச்சி வடிகட்டி கல்லடைப்பு, நீரடைப்பு, மற்றும் சிறு நீரக நோய்களுக்குக் கொடுத்து வரலாம். இதனையே படிகாரம், வெடியுப்பு, நண்டுக்கல் இவைகளைக் கொண்டு செய்யப் படும் பற்பங்களுக்கு துணை மருந்தாகவும் கொடுத்து வரலாம்.


சிறு பீளை வேரில் அரைப்பலம் பஞ்சுபோல் தட்டி அரைப்படி நீரில் போட்டு வீசம் படியாகச் சுண்டக் காய்ச்சிவடிகட்டி உள்ளுக்கு இரண்டு வேளை கொடுக்க நீர்கட்டைஉடைக்கும். நாகத்தைச் சுத்தி செய்து கடாயிலிட்டுகண்ணான் உலையில் வைத்து ஊதிக் கடாயானது நெருப்பைப்போல் இருக்கும் போது சிறு பீளையை பொடியாக வெட்டிப்போட்டுக் கரண்டியினால் துழாவிக் கொடுக்கப் பூத்தபற்ப மாகும். ஆறவிட்டு வஸ்திரகாயம் செய்து 1 - 1.5குன்றி எடை நெய், வெண்ணெய் முதலியவற்றில் தினம்இரண்டு வேளை கொடுக்க நீர் கட்டை உடைக்கும்.வெள்ளை, வேட்டை குணமாகும்.


பெரும் பீளையானது மிகு சோமையும், பைசாசு முதலியசங்கை தோஷமும், கல்லடைப்பு முதலிய சில ரோகங்களும் தீரும்.


இதன் வேரைத்தட்டி அரைப் பலம் எடைக்கு ஒரு குடுவையில்போட்டு அரைப்படி சலம் விட்டு வீசம் படியாகச் சுண்டகாய்ச்சி வடிகட்டி வேளைக்கு
1 - 1.5 அவுன்ஸ் அளவு தினம் 2 -3 வேளை உட்கொள்ள நீர்கட்டு, கல்லடைப்பு, சதையடைப்பு போம். இதன் கியாழம் பாஷாணங்களின் வீறை அடக்கும்.
--------------------------------------

சங்குப்பூ.1) மூலிகையின் பெயர் - சங்குப்பூ.
2) தாவரப்பெயர் -: CLITORIA TERNATEA.
3) தாவரக் குடும்பம் -: FABACEAE, (PAPINONACEAE)
4) வகைகள் -: நீல மலருடையதைக் கறுப்புக் காக்கரட்டான் என்றும், வெள்ளைப் பூ உடையதை வெள்ளைக் காக்கணம் என்றும் வகைப்படுத்துவர்.
5) வேறு பெயர்கள் -: காக்கணம் செடி, மாமூலி, காக்கட்டான் என்றும் உண்டு.
6) பயன்தரும் பாகங்கள் -: இலை, வேர் மற்றும் விதை முதலியன.
7) வளரியல்பு -: சங்குப் பூ கொடி எல்லா இடங்களிலும்வேலியோரங்களில் வளரக்கூடியது. இது கொடி வகையைச் சேர்ந்தது. இதன் பூக்கள் நீல நிறத்திலும் வெண்மை நிறத்திலும் காணப்படும். இது கூட்டிலைகளையுடைய ஏறு கொடி. சங்குப்பூ கொடியாக வளரும்.இயலுபுடையது. அழகுக்காக வீடுகளிலும்வளர்க்கப் படுகின்றது. தட்டையான காய்களையுடையது. பொதுவாக மருத்துவத்திற்கு வெண்ணிறப் பூவை உடைய வெண் காக்கட்டானே பயன்படுத்தப் படுகின்றது. இது சிறந்த மருத்துவப் பயன் உடையது. இதன் பூக்கள் பார்ப்பதற்கு சங்கு போல் இருப்பதால் சங்குப் பூ என்ப் பெயர் வந்தது. காக்கண விதைகள் நறு மணம் உடையதாகவும் புளிப்புச் சுவை கொண்டதாகவும் இருக்கும். இதன் குணம் சிறுநீர் பெருக்குதல், குடற் பூச்சிக் கொல்லுதல், தாது வெப்பு அகற்றுதல், பேதி, வாந்தி, தும்மல், உண்டாக்குதல்.
8) மருத்துவப் பயன்கள் -: நெறிக்கட்டிகள் வீங்கி இருக்கும் போதுசங்குப்பூவின் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து அருந்து வர வியர்வை நீங்கும்.
சங்கு பூவின் இலைச்சாற்றைக் கொண்டு புடமிடதங்கம் பஸ்பமாகும்.
சங்குப்பூவின் இலைகளை சட்டியல் இட்டு இளவறுப்பாக வறுத்து நன்கு சூரணம் செயது கொண்டு இருநூற்று ஐம்பது மி.கி. முதல் ஐநூறு மி.கி. வீதம் அருந்தி வர, மலக்கட்டு நீங்கி நன்றாக கழிச்சல் ஏற்படும்.
காக்கரட்டான் பச்சை வேர் 40 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. யாகக்காயச்சி 1 முடக்கு வீதம் 2 மணிக்கு 1 தடவை 6 முறை சாப்பிடச் சுரம், தலைவலி ஆகியவை தீரும்.
வேரைப் பாலில் அவித்து, பாலில் அரைத்து சுண்டையளவு காலை மாலை பாலில் சாப்பிட மேகவெள்ளை, பிரமேகம், தந்தி மேகம், சிறுநீர் பாதை அழற்சி, நீர் எரிச்சல் ஆகியவை தீரும்.
வெள்ளைக் காக்கரட்டான் வேர், கட்டுக் கொடி இலை, கீழாநெல்லிச் சமூலம், பெருநெருஞ்சில் இலை, அறுகம்புல் வகைக்கு 1பிடியுடன் 5,6 மிளகு சேர்த்து மை போல் அரைத்து நெல்லிக்காயளவு தயிரில் கொள்ள எவ்வளவு நாள்பட்ட வெள்ளை ஒழுக்காயினும் தீரும்.
கருங்காக்கரட்டான் வேரை பாலாவியில் வேக வைத்து உலர்த்தி பாதியளவு சுக்குடன் பொடித்து காலை மாலை 2 சிட்டிகை வெந்நீருடன் கொள்ள வாத நோய், வாயுவலி, சீதளம் நீங்கும். இச்சூரணத்தில் 5 அரிசி எடை குழந்தைகளுக்குக் கொடுக்க மந்தம், மலச்சிக்கல் நீங்கும்.
நெய்யில் வறுத்து இடித்த விதைச் சூரணம் 5 முதல் 10 அரிசி எடை வெந்நீருடன் கொடுக்க குழைந்தைகளுக்கான இழப்பு, மூர்ச்சை, நரம்பு இழுப்பு ஆகியவை தீரும்.
விதைத்தூள் 50 கிராம், இந்துப்பு 50 கிராம், சுக்குத்தூள் 25 கிராம் கலந்து தினம் 1 வேளை 3 கிராம் சாப்பிட்டு வர மலப்போக்கு பெருகி, யானைக்கால் வீக்கம் மெல்லக்குறையும். மேலும் இலையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்ட வீக்கம் குறையும்.
நாள் பட்ட கப நோய்களுக்கு காகட்டான் பட்டையை நன்கு இடித்து, சாறு பிழிந்து இருப்பத்தி நான்கு கிராம் அளவு எடுத்து குளிர்ச்சியான பாலுடன் அருந்தி வர எழிதில் குணம் தரும்.
காக்கட்டான் வேர்ப் பட்டையை ஊற வைத்த ஊறல் குடி நீரை முப்பது மி.லி. முதல் அறுபது மி.லி. வீதம் அருந்தி வர, சிருநீர்ப்பை நோய்களும் சிறுநீர்ப் பாதை எரிச்சல், வலி முதலிய நோய்களும் குணமாகும்.
குப்பைமேனி

1) வேறுபெயர்கள் :- பூனை விரட்டி, இந்தியன் அக்கலிப்பா,மரகாந்தா, குப்பி, கஜோதி.

2) தாவரப்பெயர் :- ACALYPHA INDICA.

3) குடும்பம் :- EUPHORBIACEAE.

4) வளரும் தன்மை :- இது தோட்டங்கனிலும், சாலையோரங்களிலும். பொதுவாக இந்தியாவில் எங்கும் காணப்படுகிறது. குப்பை மேனிக்கு அருகில் பூனை வராது. சிறு செடியாக வளரும். இதன் இலை பச்சைபசேலென முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும். இலையில்
ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறியதாக இருக்கும். காய்கள் முக்கோண வடிவில் மிளகளவில் பச்சையாகக் காணப்படும். காய்களைச் சுற்றிப் பச்சை நிறத்தில் செதில்கள் இருக்கும். மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும் இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களைக் கொண்ட
குறுஞ்செடி. இது சுமார் 50 செ.மீ. உயரம் வரை வளர வல்லது. குனான், ஸ்டீரால்ஸ் மற்றும், சைனோஜெனிக் க்ளைக்கோஸைடு போன்ற மிகவும் விஷம் வாய்ந்த வேதிப் பொருட்களையும் உடையது. குப்பை மேனியை மார் ஜாலமோகினி என்பர். எரிப்புகுணமுடையது.வசீகரப்படுத்தும்இயலடையது.
மாந்திரீக மூலிகையாகும். விதை நாற்றுக்கள் மூலம் இனப்பெருக்க செய்யப்படுகிறது.

5) பயன்தரும் பாகங்கள் :- செடி முழுதும் மருத்துவப்பயனுடையது.

6)பயன்கள் :- நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக்கட்டுப் படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.

சமூல சூரணம் 1 சிட்டிகை நெய்யில் காலை மாலைஒரு மண்டலம் கொடுக்க 8 வித பவுத்திர நோயும்தீரும்.

வேர்சூரணம் 1 லிட்டர் நீரில் 1 பிடி போட்டு 8 இல்ஒன்றாய் காச்சிக் கொடுக்க நாடா புழு, நாக்குப்பூச்சிநீங்கும். பேதியாகும் சிறுவர்களுக்குப் பாதியளவுகொடுக்கவும்.

இலையை விளக் கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டிவரப் படுக்கைப் புண்கள் தீரும்.

இலைச் சூரணத்தைப் பொடி போல் நசியமிட தலை வலி நீங்கும்
இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் பூசி சற்றுநேரம் கழித்துக்குளிக்கத் தோல் நோய் அனைத்தும்தீரும்.

மூலநோய் :- மூலநோய் ஒரு சிக்கலான நோய்.அறுவை செய்தாலும் வளரும். மூலிகை மருந்துகள்நல்ல பயன் தரும். ஆசனமூலம், பக்க மூலம், சிந்திமூலம், மேக மூலம், சரக்கண்ட மூலம், மாலைமூலம், கொடிமூலம், கண்டமாலை என எட்டு வகைப்படும். பதினெட்டுவகை எனவும், கூறுவர். அவைஇவற்றில் அடங்கும். மூலத்திற்குக் குப்பைமேனிசிறந்த மருந்தாகும். பூத்த குப்பைமேனியை வேறுடன்பிடுங்கி நிழலில் உணர்த்தி சூரணம் செய்து இதில்2 - 5 கிராம் அளவு பசும் நெய்யில் காலை மாலைசாப்பிடுக, 48 நாள் சாப்பிட எந்தவகை மூலமும்முற்றிலும் குணமாகும்மோரில் சாப்பிடுக. புளிகாரம் இல்லாவிடில் விரைந்து குணமடையும்.

நாடாப்பூச்சி, புழு - குடற்பழுவான நாடாப்புழு, கீரிப்பூச்சி, ஆகிய வற்றிக்கு, இதன் வேர் 50 கிராம்200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள்அனைத்தும் வெளியேறும்.

விடம் :- குப்பைமேனிச்சாற்றில் சுண்ணாம்பு மத்தித்துநாய், பாம்பு, எலி, முதலியன வற்றில் கடி வாயில்தடவ குணமடையும். மேகப்புண்ணும் குணமடையும்.

படுக்கைப்புண் :- ஆமணக் கெண்ணையில் இந்த இலையை வதக்கி இழஞ் சூட்டுடன் வைத்துக் கட்ட படுக்கைப் புண், மூட்டு வீக்கம், வாத வலி தீரும்.

தலைவலி :- இந்த இலையின் பொடியை மூக்கில்பொடிபோல் இழுக்க நீர் வடிந்து தலைவலி உடனேகுணமடையும். இதனை நசியமிடுதல் என்பர். வெறிநாய்க் கடியும், சித்த பிரமையும் குணமடையும்.

சொறிசிரங்கு :- குப்பைமேனி, மஞ்சள், உப்பு மூன்றும்அரைத்துப் பூசி ஒரு மணி நேரம் சென்று குளித்துவர சொறி சிரங்கு படை குணமடையும்.

புண் :- எல்லாவகையான புண்களுக்கும் இதன்இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும், மேனி மீண்டும் எழிலோடு விளங்கும்.
------------------------------------------------
கீழாநெல்லி

1) வேறுபெயர்கள் -: கீழ்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி.காட்டு நெல்லிக்காய், பூமியாமலக், பூளியாபாலி.

2) தாவரப்பெயர் -: PHYLLANTHUS AMARUS.

3) தாவரக்குடும்பம் -: EUPHORBIACEAE.

4) வளரும் தன்மை -: இது ஒரு குறுஞ் செடி, 60-70 செ.மீ.வரை உயரம் வளரும். மாற்றடுக்கில் இரு சீராய் அமைந்தசிறு இலைகளை உடையது. இலைக் கொத்தின் அடிப்புரத்தில் கீழ் நோக்கிய காய்கள் இருக்கும். இலைக்கொத்தின் மேற்புரத்தில் மேல் நோக்கிய காய்களை உடைய மேலாநெல்லியும் உண்டு. ஆகவே கீழா நெல்லி தான் என்பதறுகு, காய்கள் கீழ்நோக்கி அடிப்புரத்தில் இருக்கினவா என ஊர்ஜிதப்படுத்திய பின்னர் தான் இதனைப் பயன் படுத்த வேண்டும்.மிகவும் குறுகிய வயதுடைய இது இந்திய மருத்துவத்தில் அறிய மூலிகையாகக் கருதப்படுகிறது. ஆண்டு முழுதும் பயிரிடப்படும் இது மேல் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பயிர்களுள் ஒன்று. இது விதைத்த 3 - 4 மாதத்தில் அருவடைசெய்யலாம். விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகறது.

5) பயன் தரும் பாகங்கள் -: செடி முழுதும், தண்டு, வேர், மற்றும் இலைகள்.

6) பயன்கள் -: மஞ்சக்காமாலை, மேகம், கண்நோய், பித்தநோய் சிறுநீர் பெருக்கியாகவும், வெப்பு அகற்றியாகவும் வீக்கம், கட்டி, ஆகியவற்றைக் கரைத்து நரம்பு சதை ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும் செயற்படும். தீராத தலைவலி, கல்லீரல் பழுது, இரத்த சோகை இவைகளுக்கு மருந்தாகும்.

கீழாநெல்லி செடி 4 ஏலக்காய் அரிசி, கறிமஞ்சள் தூள் இவை வகைக்கு ஒரு காசு எடை சேர்த்து ஈரவெங்காயம் ஒன்று சேர்த்து பசுவின் பால் விட்டரைத்து அரைத்த கல்கத்தை பால் மோர் ஏதேனும் ஒரு அனுபானத்தில் கலக்கி காலை மாலை கொடுக்க காமாலை நிச்சயம் குணமாகும்.

நல்லெண்ணைய் இரண்டு ஆழாக்கு கீழாநெல்லிவேர், கருஞ்சீரகம், நற்சீரகம் இவை வகைக்குகால் பலம் (9 கிராம்) பசும்பால் விட்டு அரைத்துகலக்கிக் காச்சி வடித்து தலை முழுகி வரலாம்இது கீழாநெல்லி தைலமாகும்.

கீழா நெல்லி சமூலம் 4 அல்லது 5 செடி,விஷ்ணுகிரந்தி ஒரு கைப்பிடி, கரிசாலை ஒரு கைப்பிடி,சீரகம், ஏலக்காய், பறங்கிச்சக்கை வகைக்கு 5 கிராம், ஆங்கூர் திராட்சை 20 கிராம், தண்ணீர் இரண்டு லிட்டர் விட்டு நாலில் ஒன்றாகக் சுறுக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு வேளைக்கு 60 முதல் 90 மில்லி தினம் இரு வேளை சாப்பிட்டுவர மஞ்சள் காமாலை குணமாகும்.

நெல்லி சமூலம் 30 கிராம் 4 மிளகுடன் சிதைத்து2 குவளை நீரில் பொட்டு ஒரு குவளையாகக்காச்சி மூன்று வேளையாகக் குடித்து வர சூடு,சுரம்,தேக எரிச்சல் தீரும்.

இலையில் உப்பு சேர்த்து அரைத்துத் தடவிக்குளிக்கச் சொறி சிரங்கு, நமச்சல் தீரும்.

கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் கொள்ள மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து தீரும்.

இதன் இலைச் சாறு பொன்னாங்கண்ணி சாறு சமன் கலந்து நல்லெண்ணையுடன் கலந்து காச்சி தலை முழுக பார்வை கோளாறு தீரும்.

கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அத்திப்பட்டை ஆகியவற்றை இடித்து தூள் செய்து சம அளவு கலந்து வேளைக்கு 10 கிராம் வீதம் காலை மாலை வெந்நீருடன் 40 நாள் கொள்ள பெரும்பாடு, வெள்ளை, மாதவிடாய் தாமதம் உதிரச்சிக்கல் தீரும்.

கீழாநெல்லி இலை, கரிசிலாங்கண்ணி இலை தும்பையிலை சமன் அரைத்து பெரியோருக்கு புன்னைக் காயளவு, இளைஞ்யர்களுக்குக் கழற்சிக்காயளவு, சிறுவர்களுக்குச் சுண்டைக்காயளவு பாலில் பத்து நாள் கொடுத்துக் காரம் புளி நீக்கி, பால் மோர் சோறும் அரை உப்புமாகச் சாப்பிட காமாலை தீரும்.

கீழாநெல்லிசாறு, உந்தாமணிச் சாறு, குப்பைமேனி சாறு சமன் கலந்து நல்லெண்ணெயில் எரித்து நசியமிடப் பீனிசம், ஓயாத்தலைவலி நீர் வடிதல் ஆகியவை தீரும்.

ஓரிதழ் தாமரையுடன் சமன் கீழாநெல்லி சேர்த்தரைத்து நெல்லிக் காயளவு அதிகாலை 45 நாள்கள் சாப்பிட வாலிப வயோதிகம் நீங்கும்.

கீழா நெல்லியுடன் சமன் கரிசிலாகண்ணிச் சேர்த்து அரைத்து பசும் பாலுடன் 45 நாள்கள் சாப்பிடக் கல்லீரல் பழுது, பாண்டு, சோகை, இரத்தமின்மை தீரும். ---------------------- (தொடரும்.)
கற்பூரவல்லி

1)வேறுபெயர்கள்- ஓமவல்லி, ஒதப்பன்னா, பாசானபேதி, கண்டிரி போரேஜ்.

2)தாவரப்பெயர்- COLEUS AROMATICOS.

3)குடும்பம்-லாமியேசியே.

4)வளரும் தன்மை-இதன் தாயகம் இந்தியா. இதைப்பற்றிய குறிப்பிகள் நமது சித்தர்கள் ஓலைச்சுவடிகளில்இருந்ததாக சரித்திரம் சான்றியம்புகிறது. இந்தியாவின்அனைத்துப்பகுதிகளிலும் இத்தகைய மூலிகைச் செடி நன்றாக வளரும். இதை வீட்டில் உள்ள சிறிய தோட்டத்தில் கூட வளர்த்து உடனடி நிவாரணத்திற்குப் பயன்படுத்துகின்றனர். இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள குறு மண் மற்றும் வண்டல் மண்,செம்மண், களிகலந்த மணற்ப்பாங்கான இரு மண் பாட்டு நிலம் ஏற்றது.6.5 - 7.5 வரையிலான கார\ அமிலத்தன்மை ஏற்றது.தட்ப வெப்பம் குறைந்தது 25* செல்சியஸ் முதல்35* செல்சியஸ் இருக்க வேண்டும். இனப்பெருக்கம் செய்ய 4 இலைகளுடன் கூடுய சுமார் 4 அங்குலம்நீளம் கொண்ட தண்டுகளை நட்டு நீர் பாச்சினால்ஒரு மாதத்தில் நாற்று வளர்ந்து விடும். 6 மாதத்தில் பூக் காம்புகள் உருவாகும் போதே அதனை அகற்றிவிடவேண்டும். சுமார் 8 மாதத்தில் இலைகள் முதிர்வடைகின்றன. அப்போதுதான் 'மென்தால்' சதவிகிதம்அதிகமாக்க காணப்படும்.

5)பயன்தரும் பாகங்கள் - தண்டு, இலைகள் ஆகியவை.

6)பயன்கள் - கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள்இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து. வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றிக் காச்சல் தணிக்கும் மருந்தாகும்.
இலைச் சாற்றை சர்கரை கலந்து குழந்தைகளுக்குக்கொடுக்க சீதள இருமல் தீரும்.

இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்குகலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.
இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும். -----------------------------
1) வேறு பெயர்கள்: ஆடாதொடை

2) தாவரப் பெயர்கள்: Adatoda Vasica Nees, குடும்பம் - Acanthaceae

3) வளரும் தன்மை: ஆடாதோடை என்ற செடியைக் கிராமங்களில் அனைவரும் அறிந்திருப்பார்கள். நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது. தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இது கசப்புச் சுவை, வெப்பத்தன்மை, காரப்பிரிவில் சேரும். இது விதை நாற்று, கரணை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும்.

4) பயன்படும் உறுப்புகள்: இலை, பூ, பட்டை, வேர் ஆகியவ மருத்துவப் பயனுடையவை.

5) பயன்கள்: ஆடாதோடை இலையும் ஐந்து குறுமிளகும் சாப்பிட்டால் ஆடாத உடலும் ஆடும், பாடாத குரலும் பாடும் என்ற ஒரு பழமொழியுண்டு. இதனால் காயம், ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும். கபத்தை அகற்றும், இசிவை அகற்றும். நுண்ணிய புழுக்களைக் கொல்லும். சிறுநீரைப் பெருக்கும் தன்மையுடையது.

இலையின் ரசத்தைப் பத்து முதல் இருபது துளிவரை எடுத்துத் தேனுடன் கலந்து சாப்பிட வாயு, கபக்குற்றுங்களின் பெருக்கைச் சமன்படுத்தியும், வாத தோசங்கள், பற்பல சுரங்கள், முப்பிணி நோய், வயிற்று நோய், ரத்தக் கொதிப்பு, ரத்த பித்தம், இருமல், மேல் இளைப்பு, வாந்தி, விக்கல், சூலை அண்ட வாயு இவைகளைப் போக்கும். பாடக்கூடிய நல்ல குரல் தரும். இலையை உலர்த்திச் சுருட்டாகச் சுருட்டி புகைபிடித்துவர இரைப்பு நோய் நீங்கும். ஆடாதோடை இலையுடன் இலைக்கள்ளி இலைச் சாற்றைக் கலந்து வெல்லம் சேர்த்து மணப்பாகு செய்து 10 முதல் 20 துளி அளவு 2-3 முறை கொடுத்தால் இரைப்பிருமல், வயிறு உப்புசம், கப நோய்கள் குணமடையும். இலைச்சாறு 2 தேக்கரண்டி எருமைப் பாலில் காலை மாலை கொடுத்து வரச் சீதபேதி, ரத்தபேதி குணமடையும்.

ஆடாதோடையின் பூவை வதக்கி இரு கண்களின் மீதும் வைத்துக் கட்ட கண்களில் உண்டாகும் நோய் தீரும்.

ஆடாதோடைப் பட்டையை நன்றாக இடித்துச் சலித்து குடிநீர் செய்து உட்கொண்டாலும், பட்டையை உலர்த்தி இடித்து சூரணம் செய்து வைத்துக் கொண்டு வெந்நீரில் 2 கிராம் சாப்பிட்டு வந்தாலும் சுரம், இருமல், இளைப்பு ஆகிய நோய்கள் நீங்கும்.

ஆடாதோடை வேருடன் கண்டங்கத்தரி வேர் சமனளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல் ஒரு கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சவாச காசம், சன்னி, ஈளை, இருமல், சளிசுரம், என்புருக்கி, குடைச்சல்வலி ஆகியவை குணமாகும். ஆடாதோடை வேரினால் இருமல், உஷ்ணம், மந்தம், வியர்வை நோய், கடின மூச்சு, கழுத்து வலி முதலியவை நீங்கும். கற்பிணி பெண்ணுக்குக் கடைசி மாதத்தில் வேர்கசாயத்தை காலை மாலை கொடுத்துவரை சுகப் பிரசவம் ஆகும்.

ஆகவே ஆடாதோடை என்பது இருதயம், இரைப்பை, நுரையீரல், இவைகளில் கபத்தினாலும், வாதத்தினாலும், பித்தத்தினாலும் ஏற்படும் கோளாறுகளைக் குணப்படுத்தும் ஓர் அற்புத மூலிகையாகும்.

1. மூலிகையின் பெயர் -: அரிவாள்மனைப் பூண்டு.

2. தாவரப் பெயர் -: SIDA CAPRINIFOLOLIA.

3. தாவரக்குடும்பம் -: MALVACEAE.

4. வேறு பெயர்- BALA PHANIJIVIKA.

5. பயன்தரும் பாகங்கள் -: இலை, விதை, வேர் முதலியன.

6. வளரியல்பு -: அரிவாள்மனைப் பூண்டு எல்லாவித மண்ணிலும் வளரும். ஆனால் செம்மன் நிலத்தில் நன்கு வளமுடன் வளரும். கூர் நுனிப் பற்கள் கொண்ட ஆப்பு வடிவ இலைகளை உடைய மிகக்குறுஞ் செடியினம். மாரிக் காலத்தில் தமிழகமெங்கும் சாலையோரத்தில் தானே வளரும். குருதிக் கசிவைத் தடுக்கும் மருந்தாகச் செயற்படும். இது விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப் படுகிறது.

7. மருத்துவப் பயன்கள் -: இதன் வேர் பொடி நரம்புத் தளர்ச்சியை போக்க வல்லது. ஞாபகச் சக்தியை கூட்ட வல்லது. ஆண்,பெண் சிறு நீர் கழிக்கும் பாதையை சுத்தப் படுத்த வல்லது. தகாத உடல் உறவால் ஏற்படும் தொற்று வியாதிகளைக் குணப்படுத்தும்.

ஒரு தேக்கரண்டிப் பொடியை தினமும் உணவிற்குப் பின் 2 வேளை பெண்கள் உட்கொண்டால் உடல் பலஹீனம் ஆவதைக் கட்டுப்படுத்தும்.

இதன் பொடி அரைத் தேக்கரண்டியுடன் தேன் சேர்த்து உரத்த குறலில் பேசியும், மேல்கட்டை பாடலாலும் தொண்டையில் ஏற்பட்ட வரட்ச்சி, கம்மல் ஆகியவற்றை குணமாக்கும்.

இதன் வேர், விதை இவைகளை இரண்டுக்கு ஒன்று என்ற விகித த்தில் கலந்து பொடி செய்து சர்கரையுடன் சேர்த்துத் தினம் 3 வேளை சாப்பிட்டால் ஒரு வாரத்தில் உடலில் ஏற்படும் எரிச்சில் குணமாகும்.

இதன் வேரை எடுத்துத் துண்டுகளாக வெட்டி ஒரு லிட்டர் தண்ணீரில் காய்ச்சி சுண்ட வைத்து கால் லிட்டர் ஆனவுடன் அந்தக் கசாயத்தை சாராயம் அருந்தித் தொண்டையில் எரிச்சல் உள்ளவர்கள் தினம் இரு வேளை 2 அவுன்ஸ் வீதம் ஒரு வாரம் குடித்தால் குணமடைவர்.

இதன் பொடி 10 கிராம் எடுத்து 80 மி.லி. நீரில் கொதிக்க வைத்து 20 மி.லி. யாகக் காய்ச்சி வடிகட்டி ஒரு கப் காலை மட்டும் குடித்து வர மூக்கு, வாய் மற்றும் உடலில் ஏற்படும் இரத்த ஓட்டத்தைக் கட்டுப் படுத்தும்.

அரிவாள்மனைப் பூண்டின் இலையைக் கசக்கி வெட்டுக் காயத்தில் பிழிய இரத்தப் பெருக்கு நிற்கும்.

அரிவாள்மனைப் பூண்டின் இலையுடன் சம அளவு குப்பை மேனி இலை, பூண்டுப் பல் 2, மிளகு 3 சேர்த்து அரைத்து புன்னைக் காய் அளவு உள்ளுக்குக் கொடுத்து காயத்திலும் கட்ட நஞ்சு முறியும். அப்போது உப்பு, புளி நீக்க வேண்டும்.

‘வெட்டுக்காயத்தை விரவி லுர்த்திவிடுந்
துட்டக் கடுவோட்டுத் தோன்றிமிகக் கெட்ட
பிரிவாற் றலையைப் பினக்கும் வலி நீக்கு
மரிவாள் மூக்குப் பச்சிலை.’

அரிவாள் மூக்குப் பச்சிலையானது ஆயுதங்களால் உண்டாகின்ற காயத்தைச் சீக்கிரத்தில் ஆற்றுவதுந் தவிர மாக விஷத்தையும் உதிரக் கெடுதியால் பிறந்த சிரஸ்தாப ரோகத்தையும் விலகும் என்க.

அரிவாள் மூக்குப் பச்சிலையைக் காரமில்லாத தட்டை அம்மிக் கல்லில் வைத்து வெண்ணெய் போல் அரைத்து வெட்டுப் பட்ட காயங்களுக்குத் தடவச் சீலைக் கொண்டு அழுத்திக் கட்ட இரத்தம் சொரிதல் நீங்கி விரைவில் ஆறும். இந்த இலையுடன் சிறிது மிளகு பூண்டு கூட்டி அரைத்து வேளைக்கு சிறு சுண்டைக்காய் பிரமாணம் அந்தி சந்தி 3 நாள் கொடுத்துப் பாற் பத்தியம் வைக்கக் கடுமையான விஷங்கள் இறங்குவதுடன் தலை வலியும் நீங்கும்.
1. மூலிகையின் பெயர் -: அரசு.

2.    தாவரப் பெயர் -: FICUS RELIGIOSA.

3. தாவரக் குடும்பப் பெயர் -: MORACEAE.

4.    பயன்தரும் பாகங்கள் -: கொழுந்து, பட்டை, வேர், பழம் மற்றும் விதை முதலியன.

5.    வளரியல்பு -: அரசு பெரிய மரவகையைச் சேர்ந்தது. இதன் தாயகம் இந்தியா, பங்களாதேஸ், நேபால், பாக்கீஸ்தான், சைனாவின் தென்மேற்குப்பகுதி, வியட்னாவின் கிழக்குப்பகுதி மற்றும் இந்தோசைனா. இது சுமார் 90 அடிக்குமேல் வளரக்கூடியது. இந்த மரத்தின் அடிபாகம் சுற்றளவு சுமார் 9 அடி வரை பெருக்கும். இதன் ஆரம்ப ஆண்டு 288 பி.சி க்கு மேல் இருக்கும். இலைகள் நீழ் வட்டமாகவும் கூர்நுனியாக இருக்கும். ஊர் ஏரிகள், குளக்கரைகள்,  ஆற்றோரங்கள் ஆகிய இடங்களில் காணப்படும். இது ஜைனம், புத்த, இந்து மதங்கள் புனித மரமாகக் கருதிகிறார்கள். புத்தர் ஞானம் அடைந்தது இந்த மரத்தடியில் தான். கணவம், போதிமரம் என்றும் சொல்வர்கள். இந்த மரத்தின் காற்று தூய்மையான ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. அதனால் கல்பக விருட்ச்சமாகக் கருதப்படுகிறது. இந்த மரத்தின் அடியில் தெய்வ சிலை வைத்து வழிபடுவதன் நோக்கம் அறியலாம். இதன் பூக்கள் சிறிதாகச் சிவப்பாக இருக்கும். பிப்ரவரிமாதங்களில் பூக்கும்.  மே, ஜூன் மாதங்களில் பழங்கள் விடும். பழங்கள் சிறிதாக இருக்கும் பறவைகளுக்கு நல்ல உணவு. விதைகள் சிறிதாக அதிகமாகத் தென்படும். பறவைகள் இதன் பழத்தைச் சாப்பிட்டு எச்சத்தை இடும் இடங்களில் செடிகள் உற்பத்தியாகும் முக்கியமாக கட்டிடங்களின் இடுக்குகளில் செடிகள் பெருகும். தெய்வ நம்பிகையுள்ளவர்கள் இந்த மரத்துடன் வேப்பமரத்தையும் சேர்த்து வளர்ப்பார்கள். பல கிராமங்களில் இந்த அரச மரத்தைச் சுற்றி மேடையமைத்து ஊரில் உள்ள வயதானவர்கள் அரட்டையடித்துப் பொழுது போக்குவதும் அங்குதான். உதாரணம் கெம்பனூர் போன்று. இந்த மரத்தினடியில் இருந்து காற்றை அனுபவித்தால் இருதயநோய் வராது என்பது எந்த அளவுக்கு உண்மையென்று தெறியவில்லை. விதைகள் மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.

6.    மருத்துவப்பயன்கள் -: அரச மரத்தின் இலைக் காற்று குளிர்ச்சியை உண்டாக்கி வெப்பத்தைப் போக்கி கிருமிகளை அழிக்கும் தன்மையுடையது.  ஆண்மை பெண்மையாக் காப்பாற்றும். வேர்பட்டை, மரப்பட்டை கிருமிகைளை அழித்து புண்ணாற்றும், பழவிதை குடல் புண்ணாற்றும், மலச்சிக்கலைப் போக்கும், தாது பெருக்கி விந்தினைக் கட்டும். பழம் ஆஸ்த்துமாவைக் கட்டுப்படுத்தும், வேர் அல்சரைக் குணப்படுத்தும், தோல்வியாதிகளைக் குணப்படுத்தும், இருதயத்தைக் குணமாக்கும்.

அரச மரத்துக் கொழுந்து இலையைக் கைப்பிடி எடுத்து அரைத்து, நெல்லிக்காயளவு எருமைத் தயிருடன் சேர்த்து அதிகாலையில் சாப்பிட்டு வர, தொண்டை வறட்சி, தாகம் நீங்கும். குரல் வளத்தைத் தரும். சீதபேதியைக் கட்டுப்படுத்தும்.

“அரசம் வேர் மேல் விரணமாற்றும். அவ்வித்து
வெருவரும் சுக்கில நோய் வீரட்டும்-குரல்வளை
தாகம் ஒழிக்கும், கொழுந்து தாது தரும். வெப்பகற்றும்,
வேக முத்தோடம் போக்குமென்” ---- கும்பமுனி.

அரச மர வேரின் பொடி தொண்டைப் புண்ணை ஆற்றும். விதை சுக்கில குறைபாட்டை நீக்கி மலட்டை அகற்றி கருத்தரிக்க வைக்கும், கொழுந்து கசாயம் தொண்டைப் புண்ணை ஆற்றும்,  தாகம் தணிக்கும். கொழுந்து அரைத்துச் சாப்பிட நீர்த்துப் போன விந்து கெட்டியாகும், தாது ஊறும், உடல் வெப்பம் தணியும். வாத, பித்த, சிலேத்தும நோய்களைப் போக்கும்.

அரச தளிரை அரைத்துப் பூசினால் கால்வெடிப்பு குணமாகும். இதன் பாலைத் தடவினாலும் குணமாகும்.

அரசு மரப்பட்டையை உலர்த்தி எரித்த சாம்பலை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர சொறி, சிரங்கு குணமாகும், பிற புண் ஆறும்.  இப்பொடியை சாம்பிராணியுடன் சேர்த்துப் புகைத்தால் தீங்கு செய்யும் நுண்ணுயிர்க் கிருமிகள் வீட்டில் தங்கா.

வேர் பட்டை 30 கிராம் 300 மி.லி. நீரில் போட்டு 100 மி.லி. யாகக் காய்ச்சி பால் சர்கரை சேர்த்துப் பருகி வர வெட்டைச் சூடு, தினவு, நீர் எரிச்சல் ஆகியவை தீரும்.

அரசு பட்டைத் தூள் 2 சிட்டிகை வெந்தீரில் கொதிக்க வைத்து ஆற விட்டு வடித்துக் கொடுக்க விக்கல், தொண்டைக் கட்டு, குரல்வளை நோய் தீரும்.

அரச மரத்திலிருந்து விழுந்த பழத்தை எடுத்து சுத்தப்படுத்தி நன்கு காயவைத்துப் பொடியாகச் செய்து சூரணமாக வைத்துக் கொள்ள வேண்டும். 5-10 கிராம் இப்பொடியை நாளும் காலை மாலை பாலில் கலந்து சர்கரையும் சேர்த்து காப்பி போல 48-96 நாள் சாப்பிட வேண்டும். ஆண் விந்து கட்டும், ஊறும். ஆண்மை பெருகும். ஆண் மலடு நீங்கும்.

அரசங் கொழுந்தை குடிநீராக்கிக் குடிக்க சுரம், தாகம் ஆகியவை தீரும்.

உலர்ந்த பழத்தை இடித்துப் பொடி செய்து 5 கிராம் வெந்நீரில் காலை, மாலை 20 நாள்கள் கொடுக்க சுவாசக் காசம் தீரும்.

அரசு இலைக் கொழுந்து ஒரு பிடி எடுத்து மண் சட்டியில் போட்டு அரை லிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி காசாயமிட்டுச் சாப்பிடலாம். இலைக் கொழுந்தை அரைத்து நெல்லியளவு பாலில் கலந்து சாப்பிடலாம். 48 நாள் சாப்பிட பெண்மலடு நீங்கி கருத்தரிக்கும். புளி உணவைக் குறைக்க வேண்டும்.

அம்மான்பச்சரசி.


1) வேறுபெயர்கள் -: சித்திரப்பாலாடை.


2) தாவரப்பெயர் -: EUPHORBIA HIRTA.


3) தாவரக்குடும்பம் -: EUPHORBIACEAE.


4) வகைகள் -: பெரியமான் பச்சரிசி, சிற்றம்மன் பச்சரசி,சிவப்பம்மான் பச்சரிசி, வெள்ளையம்மான் பச்சரிசி,வயம்மாள் பச்சரிசி.


5) வளரும் தன்மை -: ஈரமுள்ள இடங்களில் தானே வளரும். சிறு செடி. எதிர் அடுக்கில் கூர்நுனிப்பற்களுடன் கூடியஈட்டி வடிவ இலைகளையுடையது. பால் உள்ளவை. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது.விவசாய நிலங்களில் கழையாக வளரும். விதை மூலம் இனப்பெருக்கம் அடைகிறது.


6) பயன்தரும் பாகங்கள் -: இலை, தண்டு, பால், பூ, ஆக்கியவை.


7) பயன்கள் -: அம்மான் பச்சரிசிக்கு எரிபுண், மல பந்தம், பிரமேகக்கசிவு, சரீரத்துடிப்பு, நமச்சல் ஆகியவை போகும்.


இந்த மூலிகையை சுமார் நெல்லிக்காய் பிரமாணம் நன்றாய் அரைத்து பாலில் கலந்து தினம் ஒரு வேழை மூன்றுநாட்கள் கொடுக்க அரத்த பிர்ழியம், மலபந்தம், நீர்கடுப்பு,தேகநமச்சல், ஆகியவை நீங்கும். இதன் பாலை நக சுற்றிக்குஅடிக்க குணமாகும்.


சிவப்பு அம்மான் பச்சரிசி மூலிகைக்கு வாதம், பிரமேகம்,ஆகியவை போகும். சுக்கில தாது விர்த்தியாகும். இதைவெள்ளிபஸ்பம் என்றும் கூறுவர்.
இதை நிழலில் உலர்த்தி இடித்து சூரணம் செய்து வைத்துக்கொண்டு 5 - 7 குன்றி எடை வீதம் மோரில் கொடுக்க குழந்தைகளுக்கு மலத்தை போக்கும், வயிற்று உபத்திரவத்தையும், கிருமிக் கூட்டத்தையும் ஒழிக்கும். இந்த இலையை அரைத்து சுமார் 1- 1.5 கழற்சிக்காய்ப் பிரமாணம் பால் அல்லது மோரில் கலக்கிப் பெரியவர்களுக்குக் கொடுக்க வேட்டை, வெள்ளை, மருந்துகளின் உஷ்ணம் ஆகியவைபோகும். அரைத்து ஊறலுடன் பரவுகின்ற படைகளுக்குப்பூச குணமாகும்.


இது வயிற்றுப்பூச்சி அகற்றியாகவும், மலமிளக்கியாகவும்,வெப்புத் தணிப்பானாகவும், சதை நரம்புகளில் வீக்கம்குறைப்பானாகவும், செயற்படும்.
இலையை சமைத்து உண்ண வறட்சி அகலும், வாய், நாக்கு, உதடு, ஆகியவற்றில் வெடிப்பு ரணம் தீரும்.


தூதுவேளை இலையுடன் துவையல் செய்து சாப்பிடத்தாது உடல் பலப்படும்.
கீழாநெல்லியுடன் சமன் அளவு இலை சேர்த்து காலை, மதியம், இரு வேழையும் எருமைத் தயிரில் உண்ணஉடம்பு எரிச்சல், நமைச்சல், மேகரணம், தாது இழப்புதீரும்.


பூவுடன் 30 கிராம் அரைத்து கொட்டைப் பாக்களவு பாலில் கலந்து ஒரு வாரம் கொடுக்கத் தாய் பால்பெருகும்.


பாலைத் தடவி வர முகப்பரு, பால்பரு மறையும். கால் ஆணி வலி குறையும். இலையை நெல்லிக்காய் அளவு நன்கு அரைத்துபசும் பாலில் கலக்கிக் காலையில் மட்டும் மூன்று நாட்கள் கொடுக்கச் சிறு நீருடன் குருதிப்போக்கு, மலக்கட்டு, நீர்கடுப்பு, உடம்பு நமச்சல் ஆகியவை தீரும்.
---------------------------------
மூலிகையின் பெயர் -: மூக்கிரட்டை.

தாவரப்பெயர் :- BOERHAAVIA DIFFUSA.

தாவரக்குடும்பம் ;- NYCTAGINACEAE..

வேறு பெயர்கள்-மூக்குறட்டை, சாட்டரணை, மூச்சரைச்சாரணை முதலியன.

பயன்தரும் பாகங்கள் :- இலை, தண்டு, வேர் விதை முதலியன.

வளரியல்பு :- மூக்கிரட்டை தரையோடு படர்ந்து வளரும் சிறு கொடி. இலைகள் மேல்புரம் பச்சையாகவும் கீழ்புரம் வெழுத்து சாம்பல் நிறத்திலும் நீழ்வட்டமாக எதிர் அடுக்கில் இருக்கும். செந்நிறச் சிறு பூக்களையும் சிறு கிழங்கு போன்ற வேர்களையும் உடைய கொடி. இது தமிழகமெங்கும் தோட்டங்களிலும், தரிசு நிலங்களிலும் தானே வளர்கிறது. சாலையோரங்களிலும், வாய்கால் போன்ற இடங்களிலும் காணப்படும் கழைக்கொடி.. சிறிது வேர் இருந்தாலே ஈரம் பட்டவுடம் தளைத்துவிடும். இதன் தாயகம் இந்தியா பின் பசிபிக்கிலும், தென் அமரிக்காவிலும் பரவிற்று. இது செப்டம்பர் முதல் டிசம்பர் மாதங்களில் பூத்துக்காய்க்கும். விதைமூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் :- ஒரு பிடி  வேரும், 4 மிழகும் 100 மி.லி.விளக் கெண்ணையில் வாசனை வரக் காய்ச்சி ஆறவிட்டடு வடிகட்டி வைத்ததுக் கொண்டு
6 மாதக் குழந்தைக்கு 15 மி.லி.
அதற்கு மேல் 30 மி.லி. வாரம் 1 அல்லது 2 முறை கொடுத்துவர மலச்சிக்கல், மூலச்சூடு, நமைச்சல், சொறி சிரங்கு, மலக்கழிச்சல், வாந்தி,செரியாமை ஆகியவைத் தீரும். மாலையில் வசம்பு சுட்ட கரியைப் பொடி செய்து தேனில் உட்கொள்ளவும்.

ஒரு பிடி வேர், மிளகு 4, உந்தாமணிச்சாறு 50 மி.ல்லி. ஆகியவற்றை100 மி.லி. விளகெகெண்ணையில் காய்ச்சி வாரம் 2 முறை மேற்கண்ட முறையில் சொன்னவாறு கொடுத்து வர குழந்தைகளுக்குக் காணும் காமாலை, கப இருமல், சளி, மாந்த இழுப்பு, அடிக்கடி சளி, காய்ச்சல்  வருதல் குணமாகும்.

ஒரு பிடி மூக்கிரட்டை வேர், அருகம்புல் 1 பிடி, மிளகு 10 எண்ணிக்கை இவற்றைச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 3 வேளையாகத் தினமும் குடித்து வர கீல் வாதம், ஆஸ்துமா, கப இருமல், மூச்சுத் திணரல் தீரும்.

வேர் ஒரு பிடி, அருகம்புல் ஒரு பிடி, கீழாநல்லி ஒரு பிடி, மிளகு 10 சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி தினம் 2 வேளை சாப்பிட்டு வரக் காமாலை, நீர் ஏற்றம், சோகை, வீக்கம், நீர்கட்டு, மகோந்தரம் தீரும்.

இலையைப் பொறியல், துவையலாக வாரம் 2 முறை சாப்பிட்டு வரக் காமாலை, சோகை, வாயு நோய்கள் வராமல் தடுக்கலாம்.

வேரை உலர்த்திப் பொடித்துக் காலை, மாலை ஒரு சிட்டிகை தேனில் கொள்ள மாலைக் கண், கண்படலம், பார்வை மங்கல் ஆகியவை குணமாகும்.

கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் கொள்ள மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து தீரும்

இலையைத் தொடர்ந்து பயன்படுத்தி வரப் பொலிவும் இளமையும் வசீகரமிம் உண்டாகும்.
இதன் இலைகளை சுத்தம் செய்து நன்கு அரைத்து நெல்லிக் காயளவு எடுத்து கால் ஆழாக்கு  கருங்குறவை அரிசியில் சேர்த்து சமைத்து அந்த மாவை அடையாகத் தட்டி வாணலியில் அதிக எண்ணெய்யிட்டு அதை வேகவைத்து வேளைக்கு ஒரு அடை வீதம் காலை, மாலை 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும். அப்போது தவிர்க்க வேண்டியவை காரம், மீன், கருவாடு, ஆகியவை.

மூக்கிரட்டைப் பட்டை வேர்-20 கிராம், மாவிலங்கு மரப்பட்டை-20 கிராம், வெள்ளைச் சாரணை வேர்-20 கிராம் மூன்றையும் பொடியாக இடித்து முதல் நாள் இரவில் 250 மி.லி. தண்ணீரில் ஊரவைக்கவேண்டும். 50 மி.லி. வரும் வரை கொதிக்கவைத்து இறக்கி வைத்து ஆறவிட்டு வடிகட்ட வேண்டும். இத்துடன் 60 மி.லி. கிராம் நண்டுக்கல் பற்பம் சேர்க்க வேண்டும். தினமும் பல் துலக்கியதும் இதை அருந்திவர 2,3 மாதங்களில்  முகவாத நோய் நிரந்தர குணம் ஏற்படும்.

தூதுவளை

தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் காய கற்ப மருந்துகள் சிறப்பானதாகும்.
காயகற்பம் = காயம்+கற்பம் . காயம் என்றால் உடல். கற்பம் என்றால் உடலைநோயணுகாதபடி வலுவடையச் செய்யும் மருந்து. நரை, திரை, மூப்பு, பிணிநீக்கி, வயதுக்கு தகுந்தவாறு ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடவைத்துநீண்டநாள் வாழச் செய்வது கற்பமாகும்.
இந்த கற்பமானது உடம்பை கல்போல் ஆக்கும். கல்லினால் செதுக்கப்பட்ட சிலைஎப்படி பன்னெடுங் காலமாக அப்படியே உள்ளதோ அதுபோல் நரை, திரை, மூப்புபிணிகளை நீக்கினால் உடலும் கல்போல் ஆகும்.
சித்தர்கள் உடலை கற்பமாக்க கற்ப மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர்.மூலிகையில் உள்ள தாதுப் பொருட்களை தனியாகவோ அல்லது பல மூலிகைகள் கலந்தோஅல்லது உலோக உபரச உப்பு பொருட்களை சேர்த்தோ நன்கு பக்குவப்படுத்திபத்தியம் மேற்கொண்டு ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் பிணியில்லாபெருவாழ்வு வாழலாம் உடலை கற்பமாக்கும் இம் மூலிகைகள்தான் கற்ப மூலிகைகள்.
அதுபோல் இந்த கற்ப மருந்தை சாப்பிடும் காலத்தில் தூய்மையான மனதுடன்இருக்க வேண்டும். தெய்வ சிந்தனை வேண்டும். மனம் தூய்மையானால் கற்ப மருந்துசிறந்த பலனைத் தரும் என்பதில் ஐயமில்லை. பொதுவாக கற்ப மருந்தை நல்ல நாள்பார்த்து சாப்பிட வேண்டும். ஆரம்பத்தில் சிறியதாக உட் கொள்ளும் மருந்தைநாட் செல்லச் செல்ல அதிகரிக்க வேண்டும். ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள்சாப்பிட வேண்டும்.
இக்காலங்களில் புளியை நீக்குவது நல்லது. மேலும் அகப் பத்தியம் என்றுஅழைக்கப்படும் ஆண் பெண் சேர்க்கையை தவிர்க்க வேண்டும். மது, புகை, போதைப்பொருட்களை அறவே தொடக் கூடாது.
கற்ப மூலிகைகளில் சிறந்ததான தூதுவளை பற்றி தெரிந்து கொள்வோம்.
தூதுவளை
தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில்இதுவும் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு. இந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும்.சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும்மருத்துவப் பயன் கொண்டது.
தூதுவே ளையையுணத் தொக்கினிற் றொக்கிய
வேதையா நொயெலா மெய்யைவிட் டகலுமே
(தேரையர் காண்டம்)
தூதுவளைக் கற்பம்
தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம்சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளிமுதலியவை நீங்கும்.
தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.
தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும்,பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்துசமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
வாத, பித்தத்தால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த மிளகு கற்பம் 48 நாட்கள்சாப்பிட்டபின், தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத,பித்த நோய் தீரும்.
தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு காலை, மாலை எனஇருவேளையும் தேனில் கலந்து கற்ப முறையாக பத்தியம் கொண்டு ஒரு மண்டலம்சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்குநோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும். தாதுவைபலப்படுத்தும்.
தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். இந்திரியம் அதிகமாகி ஆண்மையைக் கூட்டும்.
காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும்.
மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்து.
தூதுவளை காயை சமைத்தோ, அல்லது வற்றல், ஊறுகாய் செய்து ஒருமண்டலம் கற்பமுறைப்படி உண்டு வந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய்நீங்கும்.
தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் ஆண்மையைப் பெருக்கி உடலுக்கு வலு கொடுக்கும்.
தூதுவளை பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால்மார்புச்சளி, இருமல், முக்குற்றங்கள் நீங்கும். பாம்பின் விஷத்தைமுறிக்கும். நாளுக்கு இருமுறை மலத்தை வெளி யேற்றும்.
தூதுவளைக் கீரை, வேர், காய், இவற்றை வற்றல், ஊறுகாய் செய்து நாற்பதுநாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல் கண் நோய்கள் நீங்கும்.
தூதுவளை இலையை குடிநீர் செய்து அருந்தி வந்தால் இருமல், இரைப்பு நோய் அணுகாது.
மேற்கண்ட கற்ப முறைப்படி தூதுவளையை உண்டு வந்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம்.

மூட்டுவலி03

         எகிப்து நாட்டின் மம்மிகளில் கூட, பண்டைய நாட்களில் இவ்வகை ஆர்த்ரைடிஸ் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. இவ்வகை ஆர்த்ரைடிஸ் பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. ஆண்களைக்காட்டிலும் பெண்களையே அதிகமாகத் தாக்குகிறது. இது பொதுவாக நாற்பது வயதிற்கு மேல் ஏற்படுகிறது. அதிகமாக உணர்ச்சி வசப்படுவதாலோ, அல்லது உடலை அதிகமாக வருத்திக் கொள்வதாலோ, குளிர் பிரதேசங்கள், மலைகளில் வசிப்பதாலோ, உடலை அதிகக் குளிருக்குட்படுத்திக் கொள்வதாலோ, மற்றும் பரம்பரைக் காரணத்தினாலோ இது ஏற்படலாம். 100 மனிதர்களில் ஒருவருக்கு வருகிறது.
ருமெடாய்டு ஆர்த்ரைடிஸ் பெரும்பாலும் கால் மூட்டுக்களையும் கை விரல்களையும் தான் முதலில் பாதிக்கிறது. பின்னர் தோள்பட்டை, மணிக்கட்டு, முழங்கை மூட்டு போன்றவற்றிற்குப் படிப்படியாக பரவுகிறது. மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் எல்லா மூட்டுகளுமே ஒட்டு மொத்தமாக வீக்கத்திற்குட்பட்டு அழற்சியை அதிகப்படுத்தி விடுகின்றன. வலி அதிகமாக இல்லாவிடினும், உடல் இயக்கத்திற்கு மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. மிகப் பெரிய மூட்டுக்களான பந்துக்கிண்ண மூட்டு, கைமூட்டு போன்றவற்றில், அதிக அளவு பிடிப்பு ஏற்பட்டால், அந்த இடத்தில் வெப்பத்தையும், சிவந்த தோற்றத்தையும் உண்டாக்கி விடுகின்றன. எலும்புகளின் கோளாறை எக்ஸ்ரே செய்து பார்ப்பதன் மூலம் தெளிவாக அறியலாம். நரம்பிழை (ஜிமீஸீபீஷீஸீ) மற்றும் தசை நார்களில் ஏற்படும் கடுமையான அழுத்தம் கூட ருமெடாய்டு ஆர்த்ரைடிஸ் தோன்ற வழி வகுக்கலாம்.
அழற்சி
ஆமவாதத்தின் முக்கிய பாதிப்பு அழற்சி. நாட்பட்ட தீவிர அழற்சியில் வலி, சூடு, சிவந்து போதல், வீக்கம், பாதிக்கப்பட்ட இடம் செயலற்று போதல் இவை இருக்கும். பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து அதிக ரத்தம் பாய்வதற்கு உதவும். ஆனால் நாட்பட்ட அழற்சியில் இந்த நிவாரணமும் இருக்காது. ஆமவாதத்தில் மூட்டுகளின் சுற்றியுள்ள பகுதிகளும் பாதிக்கப்படும். எலும்புகளின் சிதைவு நோய் வந்த முதல் அல்லது இரண்டாம் வருடத்திலேயே ஆரம்பிக்கும். எனவே ஆமவாதத்தை சீக்கிரம் கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.
கீழ்க்கண்ட அறிகுறிகள் ஆமவாதத்தை உறுதிப்படுத்தும்
1. குறைந்த பட்சம் 3 மூட்டுகள் பாதிக்கப்படும். வீக்கம் தோன்றியிருக்க வேண்டும். கை எலும்புகள், விரல்களின் மூட்டுகள், மணிக்கட்டு மூட்டு பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
2. தோலடியில் சிறிய வீக்கங்கள் தோன்றுதல்
3. காலையில் கால்கள் ‘கல்’ போல் விறைப்பாக இருத்தல் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்தால், அதுவும் 15 நாட்களுக்கு தொடர்ந்தால்
4. பாதிக்கப்பட்ட இடங்களில் சீரான வீக்கம் காணப்படும்.
5. இரத்தப் பரிசோதனையில் இருந்தால்
6. எக்ஸ் – ரே மூலம் பழுதடைந்த பாகத்தை பரிசோதித்தல்
காரணங்கள் / அறிகுறிகள்
1. “ஆடோ இம்யூன்” நம் உடலில் உள்ள நோய் தடுக்கும் செல்கள், தவறுதலாக, நல்ல செல்களையே எதிரி என்று நினைத்து அழித்து விடுவது. இந்த தவறு எப்படி ஏற்படுகிறது என்பது சரிவர தெரியவில்லை. மூட்டுகளில் ‘அசுர’ ஸினோவியல் செல்கள் உருவாகி, மூட்டு ஜவ்வு, எலும்புகளை அழித்து விடும். தேய்மானம் ஏற்பட்டு வலி, அங்கவீனம் உண்டாகும். இந்த வேலியே பயிரை மேயும் நிலை, இந்த வியாதியின் பெரிய பிரச்சனையாகும்.
2. மூட்டுக்களில் (இரண்டு எலும்புகளுக்கு இடையே), உதாரணமாக தொடை எலும்பும் முழங்கால் எலும்பும் சந்திக்கும் இடமான முழங்கால் மூட்டிலே, உள்ள கார்டிலேஜ் ஒரு ‘குஷன்’ போல், குனிந்து, நிமிர்ந்து, நடக்கும் போதெல்லாம் ஏற்படும் அதிர்ச்சியை ஏற்றுக் கொண்டு விடும். இதில் இருக்கும் புரதம் குறைந்தால் இந்த ஜவ்வு தேய்ந்து போகலாம். உராய்வுகளை வழவழப்பாக ஆக்க, சினோவியம், மூட்டு திரவத்தை சுரக்கிறது. மேலே சொன்ன ‘ஆட்டோ இம்யூன்’ தவறினால், சினோவியம் பாதிக்கப்பட்டு, வீங்கிவிடுகிறது. அதன் திரவம் கெட்டியாகி, விடுகிறது. அதிகமாக திரவத்தை, தேவையின்றி சுரந்து விடும். இதனால் வீக்கம், வலி, விறைப்பு, இவை ஏற்படுகின்றன. மூட்டு சிவந்து விடும். இது முதல் கட்டம். இதில் நடக்கும் போதும் மூட்டுவலி ஏற்படும். மூட்டில் வீக்கம், தொடர்ந்த வலி இரண்டாம் கட்டம். காலை தூக்கினாலே வலித்தால் 3ம் கட்டம். ஒய்வாக இருக்கும் போதே வலித்தால் 4 வது கட்டம்.
3. முதலில் 2,3 மூட்டுக்களில் ஆரம்பித்து, நிதானமாக பரவுகிறது. இதன் தீவிரம், பாதிப்பு, மனிதருக்கு மனிதர் வித்தியாசப்படும். முதலில் தாக்கப்படும் மூட்டுக்கள் – விரல்களின் நடு கணுக்கள், மணிக்கட்டு, கால் விரல்களின் அடிபாதம், தோள் பட்டை, முழங்கால், முழங்கை, கணுக்கால்.
4. சோகை உண்டாகும்.
5. கழுத்து வலி, வாய், கண்கள் உலர்ந்து போதல்.
6. மூட்டு வலி, மூட்டுக்களில் வீக்கம், வேதனை தவிர, உடல் எடை குறையும்.
7. காலையில் தொடை, கால்கள் விறைத்திருக்கும். 30 நிமிடத்துக்கு மேல் நீடித்திருந்தால் மூட்டு வியாதியின் அறிகுறி.
8. ஆமவாத முடிச்சுகள்
9. பசியின்மை, எப்போதும் சோர்வு.
10. தசை பலவீனம், நடப்பது.
11. மலச்சிக்கல், தூக்கமின்மை, தலைச்சுற்றல் வாந்தி.
12. ஜுரம் வரலாம்.
13. தற்காலிகமாக உடல் எடை குறையலாம்.
ஆயுர்வேத அணுகுமுறை
ஆயுர்வேதத்தின் படி மூட்டுவலிகளின் முதல் ஆரம்பம் அஜீரணத்துடன் இதனால் தான் மூட்டு வலியை ‘ஆமவாதம்’ என்கிறது. ஆமா என்றால் ஜீரணிக்கப்படாத உணவு. இந்த அஜீரணம் ஏற்பட காரணம், உடல் உழைப்பில்லாமல், ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது.
‘ஆமா’ நச்சை நீக்க
ஆமவாதம் பாதித்த மூட்டை சுத்திகரிக்க, நச்சை குறைக்கும் மூலிகைகள் செறிந்த நீரை பருகலாம். 2 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து, ஒரு ஃப்ளாஸ்கில் ஊற்றி வைக்கவும். இத்துடன்
1. இரண்டு மெல்லிய இஞ்சி துண்டுகள்
2. கால் தேக்கரண்டி ஜீரகம்
3. கால் தேக்கரண்டி பெருஞ்சீரகம்
4. இரண்டு மிளகு மற்றும்
5. இரண்டு புதினா இலைகள்
இவற்றை ஃப்ளாஸ்கின் தண்ணீரில் அமிழ்த்தி ஊறவைக்கவும். இதை நாள்
முழுவதும் குடித்து வர, உடல் நச்சுப் பொருட்கள் நீங்கும்.
‘ஆமா’ வை போக்க, சாம்பார் / மசாலா பொடி போல, மூலிகை பொடி தயார் செய்து கொள்ளவும். இதற்கு தேவையானவை
1. ஒரு பாகம் கருமிளகு, ஒரு பாகம் ஓமம்
2. இரு பாகம் வெந்தயம், மஞ்சள் (தனித்தனியான அளவில்)
3. 6 பாகம் சீரகம், பெருஞ்சீரகம் – இவற்றை பொடித்து பயன்படுத்தலாம்.
ஆயுர்வேதத்தின் படி மூட்டுக்களில் திரவம் இருப்பதால் அவை ‘கபத்தின்’ ஸ்தானங்கள். ஜீரணிக்கப்படாத கழிவுகள், “வாயுவால்” மூட்டுகளில் சேர்க்கப்படுகின்றன. அதிகமாக சேர்ந்து, வீக்கத்தையும் வலியையும் உண்டாக்கும். வாயு அதிகமானால் பாதிப்புகள் ஏற்படும். வாயு அதிகமாக காரணங்கள் அதீத உடற்பயிற்சி, பட்டினி இருப்பது, விபத்து, எலும்பு முறிவு, ராத்திரி தூங்காமல் அதிக நேரம் விழித்திருப்பது, இயற்கை உந்துதல்களை அடக்குவது, கவலை, குளிரின் பாதிப்பு.
ஆயுர்வேத ஆசான்களில் ஒருவரான வாகபட்டர் எலும்புகளை பற்றி விவரமாக குறிப்பிட்டிருக்கிறார். எலும்புகள் மேதோ தாதுவால் போஷாக்கை பெருகின்றன. மேதோதாதுக்கள் கொழுப்புப் பொருள்கள். வாயு / வாதக் கோளாறுகளால் எலும்பு நோய்கள் உண்டாகின்றன. வாதம் என்றாலும் வாய்வு என்றாலும் ஒன்று தான். வாகபட்டர் எலும்புகளை 5 பிரிவுகளாக பிரித்து மொத்த எலும்புகளை 163 ஆக கணித்தார். மூட்டுகளில் கபத்தின் எண்ணைப் பசை குறைத்து, வாத வறட்சி ஏற்படும் போது மூட்டு தேய்மானம் ஏற்படும். வாத தோஷம் அதிகமானால் எலும்புகள் சுலபமாக உடையும் தன்மையை அடைகின்றன.
குளிர்காலத்தில் வாயு அதிகரிக்கும். அதீத கவலை இயற்கை வேகங்களை தடை செய்தல், இரவில் நெடுநேரம் கண் விழித்திருப்பது, குளிர்காற்று இவையெல்லாமும் வாயுவை அதிகரிக்கும். இந்த காரணங்களால் ஏற்படும் வாத வாய்வு தோஷம் ஆஸ்டியோ ஆர்த்தரைடீஸ் போன்ற மூட்டு நோய்களை உண்டாக்குகின்றன. வாயுவுடன், ஆமா என்னும் ஜீரணிக்காத கழிவுப் பொருளும் சேர்ந்து விட்டால், அது ‘ஆம வாதமாக’ உருவெடுக்கிறது. ‘கவுட்டும்’ ஆமவாதத்துடன் சேர்ந்தது தான் இவை மூன்றும் முக்கியமாக வாயு தோஷத்தால் ஏற்படுபவை. இதர தோஷங்களும் (கபம், பித்தம்) தனியாகவோ, வாயுவுடன் சேர்ந்தோ, வாதநோய்களுடன் சம்மந்தப்படுகின்றன.
ஆயுர்வதே சிகிச்சை முறைகளின் அணுகு முறை
1. வலியை போக்குதல்
2. மலச்சிக்கல் அஜீரணத்தை போக்குதல்
3. மசாஜ் – மூலிகை எண்ணைகளால் மசாஜ் செய்வது.
4. நடமாட்டம் முடங்கியிருந்தால் அதை சீர் செய்வது.
5. உள் மருந்துகள், வெளிப்பூச்சுக்களுக்கான தைலம்
6. வாழ்க்கை முறை மாற்றங்கள்
7. பத்தியம்.
ஆயுர்வேத சிகிச்சை முறை
பொதுவாக கீழ்கண்ட சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றன.
1. மருந்துகள்
2. அப்யங்கா (மசாஜ்)
3. ஸ்வேதனா (ஒத்தடம் கொடுப்பது)
4. உணவுக்கட்டுபாடு
5. யோகா
6. ஓய்வு
இவை தவிர தேவைப்பட்டால், நவரக்கிழி, பிழிச்சல், தாரை, வாபனா
வஸ்தி (எனிமா) இவை செய்யப்படும். இவற்றால் தசைகள் வலுப்படும்.
வீட்டு வைத்தியம்
(அ) ஒத்தடம்
1. புங்க இலைகளால் தயாரிக்கப்பட்ட சூடான கஷாயத்தால் ஒத்தடம் தருவது.
2. கோதுமை தவிட்டை ஒரு துணியில் “கிழி” யாக கட்டிக் கொள்ள வேண்டும். கற்பூராதி தைலம் அல்லது தந்தூராதி தைலம் இவற்றில் ஒன்றை, இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி, தவிட்டு கிழியை அதில் தேய்த்து, சூடு பொறுக்கும் அளவில் இருக்கும் போது, வலியுள்ள பாகங்களில் ஒத்தடம் கொடுக்கவும். 15 நிமிடம் இந்த ஒத்தடம் கொடுக்கவும்.
3. முருங்கைக் கீரை, எருக்கினிலை, புளியிலை, நொச்சியிலை இவற்றை சமபாகம் எடுத்து, துருவிய தேங்காயும் (சமபாகம்) சேர்த்து இரும்புச் சட்டியில் வாட்டி, தவிட்டுக்கு பதிலாக, இவ்விலைகளை துணிக்கிழியில் கட்டி, மேற்சொன்ன விதத்தில் உபயோகிக்கலாம்.
4. இடித்த புளியிலை அல்லது வெறும் வெந்நீரையோ, பொறுக்கும் சூட்டில் வீக்கமுள்ள இடத்தில் ஊற்றவும். இவ்வாறு தினம் 2 – 3 – 4 தடவைகள் செய்யலாம்.
5. புளி இலைகளை வெந்நீரில் ஊறவைத்து, மாவு போல் மசித்து, இந்துப்பு சேர்த்து, வீக்கமுள்ள இடங்களில் பற்று போடலாம்.
6. ஆடாதோடை இலைகளை வெந்நீரில் வேகவைத்து, ஒத்தடம் கொடுக்கலாம்.
7. ஆமணக்கு கஷாயத்தை வீக்கமுள்ள இடங்களில் தெளிக்கவும். அல்லது ஆமணக்கு எண்ணையை வலியுள்ள இடத்தில் பூசி, நன்றாக தடவவும். இதன் மேல் சூடாக ஒத்தடம் கொடுக்கவும். ‘ஆமா’ என்கிற மூட்டினில் தங்கியிருக்கும் கழிவு / நச்சுபொருளை நீக்க ஆமணக்கு எண்ணை சால சிறந்தது.
8. பொடி செய்த பாறை உப்பு, மணல் இவற்றை சமபாகம் எடுத்து, வாணலியில் சூடாக்கி, துணிப்பை அல்லது துணிக்கிழியில் போட்டு கட்டி, ஒத்தடம் கொடுக்கவும்.
9. பாகல் ஜுஸை மூட்டுக்களில் தடவலாம்.
10. கடுகை களிம்பாக அரைத்து மூட்டுக்களில் தடவலாம்.
(ஆ) உள்மருந்துகள்
1. பாகல் பழங்களை உப்பு, இஞ்சியுடன் வேகவைத்து, உணவுடன் உண்ணலாம்
2. கொள்ளு சூப் வாதத்தை கண்டிக்கும். உடல் எடை குறைய உதவும்.
3. உலர்ந்த இஞ்சி (சுக்கு), தனியா (கொத்தமல்லி விதை) இவற்றின் கஷாயம் வாதத்தை உண்டாக்கும் அஜீரணத்தை போக்கும். கூட ஆமணக்கு எண்ணை சேர்த்துக் கொண்டால் ரூமடாய்ட் ஆர்த்ரைட்டிஸீன் வலியை போக்கும்.
4. உலர்ந்த இஞ்சி (சுக்கு), நெரிஞ்சி (கோக்ஸ§ர்) இவற்றினால் தயாரிக்கப்பட்ட கஷாயம், அஜீரணத்தை போக்கும். இதை காலையில் குடிக்க வேண்டும். அஜீரணம் குணமானால் ஆமவாத பாதிப்புகள் குறையும்.
5. வேப்பிலை சாறு, பால் சேர்த்து பருகினால் ஆமவாத வலி குறையும்.
ஆயுர்வேத மருந்துகள்
ஆயுர்வேதத்தில் பல நல்ல மருந்துகள் ஆர்த்தரைடீஸ் வியாதிகள் பலவற்றை போக்க, பயன்படுகின்றன. கீழே சில மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. நீங்களாகவே இந்த மருந்துகளை வாங்கி உபயோகித்தால் தலைவலி போய், திருகு வலி வந்தால் போல் ஆகும். ஆயுர்வேத மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உபயோகிக்கவும்.
வெளிப்பூச்சுக்கான தைலங்கள்
மஹாநாராயண தைலம், சைந்தாதி தைலம், பிண்ட தைலம், ஆமவாத தைலம், பலாகுடிச்யாதி தைலம், பலாக்வகந்தாதி தைலம், பிரபஞ்ஜன விமர்தன தைலம், பூனாக தைலம், தன்வந்த்ர தைலம், ஷீராபாலா தைலம், விஷமுஷ்டி தைலம்.
மருந்துகள்
மஹாயோக ராஜ குக்குலு ஒரு சிறந்த மருந்து. தவிர ப்ருஹத் வட்சிந்தாமணி ரஸ, த்ரிபால சூரணம், பலாரிஷ்டம், வாதவித்வம்ஸினீ ரஸ, வாத கஜாங்குஸ ரஸ, வாத ராஷஸ, ஸ்வர்ணவாத ராக்ஷஸ.
ப்ருஹத் வட்சிந்தாமணி ரஸ மருந்துடன் மஹா ரஸ்னாதி க்வாத் என்ற மருந்தும் சேர்த்து கொடுக்கப்படுகிறது.
உணவு கட்டுப்பாடு
வயிற்று கோளாறுகள் மூட்டுவலி, மூட்டுப்பிடிப்பு – இவற்றுக்கு முக்கிய காரணம். எனவே லகுவான, கொழுப்பில்லாத, உணவுகளை உண்பது சிறந்தது. மூட்டுவலிக்கு ஏற்ற உணவுகள் தனியே தரப்பட்டுள்ளன.
இதர குறிப்புகள்
1. மூட்டுகளில் வலியை உண்டாக்கும் வேலை, செயல்களை பயிற்சிகள் இவற்றை தவிர்க்கவும்.
2. சரியாக, உட்கார வேண்டும்; மற்றும் நிற்க வேண்டும்.
3. உங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால் எடையை குறைக்கவும்.
4. ‘கெட்டியான’ படுக்கையில் படுக்கவும்.
5. மலச்சிக்கல், அஜீர்ணம் வராமல் பார்த்துக் கொள்ளவும்.
6. ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். அதுவும் நோய் தீவிரமாக தாக்கும் போது முழு ஒய்வு தேவை.
உடற்பயிற்சி, யோகா
ஆர்த்தரைடீஸ் வியாதிகள் வராமல் தடுக்க உடற்பயிற்சியும், யோகாவும் சிறந்தவை. ஆனால் ருமாடிஸம் வந்தபின், உடற்பயிற்சி, யோகா, இவற்றை டாக்டரிடம் கலந்தாலோசித்து பின் மேற்கொள்ளவும்.
இதர மருத்துவங்கள்
அலோபதி மருத்துவ முறையிலும் பல மருந்துகள் உள்ளன. இருந்தாலும்
இவற்றில் பல, பக்க விளைவுகளை உண்டாக்கும். அழற்சியை எதிர்க்கும்
மருந்துகளும், கார்டிகோஸ்டீராய்ட் மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. முதல்
வகையை சேர்ந்த மருந்துகள் ஆஸ்பிரின், ஐபூஃப்ரோஃபென் பாராசிடமால்
போன்ற பல மருந்துகள். இவை தவிர “தங்கம்” கலந்த மருந்துகளும்
கொடுக்கப்பட்டு வந்துள்ளன. தங்கம் “இன்ஜெக்ஷன்” ஊசி மூலம் உடலில்
செலுத்தப்படும். இதனால் வாய்புண், அரிப்பு, ரத்த கோளாறுகள், சரும பாதிப்புகள்
இவை உண்டாகும். இந்த தங்க மருந்தின் வியாபார பெயர் மையோக்ரிஸின்
தற்போது இந்த தங்க மருந்து நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.
சில பரிசோதனைகள்
• ருமாடிக் ஃபேக்டர் டெஸ்ட்
• இரத்தத்தின் வெள்ளையணுக்களின் எண்ணிக்கை
• இரத்தத்தின் எரித்ரோசைட் செல்கள் ‘படிவ’ டெஸ்ட்
• ‘சி’ ரீஆக்டிவ் புரதம்
• எக்ஸ்ரே
குறிப்பு
இந்த ருமாடிக் ஃபேக்டர் காணப்பட்டாலும் சிலருக்கு ஆமவாதம்
ஏற்படுவதில்லை.
ஆமவாதத்திற்கும் இதர வாதங்களுக்குமுள்ள வித்யாசங்கள்
1. ஆமவாதம் மற்ற வாத நோய்களை விட அதிகம் பரவியுள்ள வியாதி.
2. மூட்டுகள் மட்டுமன்றி உடல் முழுவதிலும் பாதிக்கும்.
3. ஆமவாத காரணி என்னும் “பொருள்” ரத்தத்தில் இருப்பது ஆமவாதத்திற்கு மட்டும் உள்ள விசேஷம். இதை இரத்தப்பரிசோதனையால் கண்டுபிடிக்க முடியும்.
4. ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸில் பளு தாங்கும் மூட்டுக்கள் பாதிக்கப்படும். உதாரணம் முழங்கால், கணுக்கால், நோய் தீவிரமாகும் போது இதர மூட்டுக்களுக்கு பரவும்.
5. ஆமவாதம் அசையும் செயல்பாடுகளை பாதிக்கும். ஆஸ்டியோ – ஆர்த்ரைட்டீஸில் அசைவுகள் வலியை உண்டாக்கும்.
6. ஆமவாதம் எந்த வயதினரையும் தாக்கும். இதர ஆர்த்ரைட்டீஸ் வியாதிகளான ஆஸ்டியோ – ஆர்த்ரைட்டீஸ், கவுட் இவைகள் சாதாரணமாக 40 வயதுக்கு மேற்பட்டவரை தாக்கும்.
7. மூட்டுக்கள் வீங்குதல், அவயங்கள் பின்னமடைதல், கோணலாக பின்னிக் கொள்தல், சிதைந்து போதல். இவை ஆமவாத அறிகுறிகள்.
ஆமவாதம், சரியாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அங்கஹீனத்தை
உண்டாக்கிவிடும். மேலும் பல சிக்கல்கள் ஏற்படும். எனவே வாத அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள். பொதுவாக ஆமவாதம், ஏன் ஆர்த்ரைடீஸ் வியாதிகள், பூரணமாக குணப்படுத்த முடியாதவை.
ஆமவாத தைலம்
தேவையானவை: கோஷ்டம் சுக்கு, வசம்பு, முருங்கை பட்டை, தோல் நீக்கிய பூண்டு, தேவதாரு, வெண்கடுகு – இவை வகைக்கு 18 கிராம் இவற்றை அரைத்தெடுத்து புளிச்சாறு 3 லிட்டர், புளித்த தயிர் 3 லிட்டர், நல்லெண்ணை 11/2 லிட்டர் சேர்த்து காய்ச்சவும். கல்கம் மெழுகுபதத்தில் வரும் போது 1 கிராம் வெள்ளை குங்கிலியத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, இந்த பாத்திரத்திலேயே தைலத்தை வடித்து சேர்த்துக் கொள்ளவும். கலக்கினால் குங்குலியமும் கரைந்து விடும். ஆமவாதத்திற்கும் ஸியாடிகாவுக்கும் இந்த தைலம் வெளிப்பூச்சாக நல்ல பலனளிக்கும்.
ஆமவாத ஜுரம்
ஆமவாதம் ஜுரத்தை உண்டாக்கும். இந்த ஜுரம் பெரும்பாலும் சிறுவர்களையும் இளவயது உடையவர்களை தாக்கும். நான்கு வயதிலிருந்து 18 வயது வரை உள்ளவர்களை தான் பொதுவாக இந்த ஜுரம் பாதிக்கிறது.
மூட்டுக்களை மற்றுமின்றி, இதயத்தையும் பாதிக்கும் ருமாடிக் ஜுரம், தொண்டையில் ஸ்ட்ரெப்டோகாகல் தொற்றால் ஆரம்பிக்கிறது. இந்த பாக்டீரியாவால் உண்டாகும் அழற்சி, வீக்கம் இவற்றுக்கு எதிராகத் தான் ருமாடிக் ஜுரம் உண்டாகிறது. பல பேர் இந்த ஜுரத்திலிருந்து மீண்டாலும் சிறுபான்மையோரின் இருதயம் நிரந்தரமாக பாதிக்கப்படலாம். தவிர ஜுரம் மீண்டும் தோன்றலாம்.
காரணங்கள் / அறிகுறிகள்
ஆமவாத ஜுரம் உடலின் பல பாகங்களை – மூட்டுகள், இருதயம், தோல் – தாக்கும். தொண்டை பாதிப்பு தொடங்கி ஒய்ந்தவுடன், குளிர், பின் ஜுரம் இவை முதல் அறிகுறிகள். மூட்டுகள் சிவந்து, சூடாகி, வீக்கமடையும். நீர் கோர்த்துக் கொள்ளும். மார்பு வலி, அதிக இதய துடிப்பு, தூக்கிப்போடுதல் ஏற்படும். மூட்டுவலி மிதமாகவும் இருக்கலாம் இல்லை தீவிரமாக இருக்கலாம். ஒரு மாதம் வரை நீடிக்கலாம். சில சிறுவர்களுக்கு வேகமான இதயத்துடிப்பு, வேறு சிலருக்கு மார்வலி ஏற்படும். இதய பாதிப்பினால் களைப்பு மூச்சுத்திணறல், வாந்தி, பிரட்டல், வயிற்றுவலி, இருமல் இவை தோன்றும்.
ஆமவாத ஜுரம் இதய வால்வுகளை சீரழிக்கும். மூட்டுக்கள் மரத்துப் போய் வலி இருக்கும். ஜுரம் 39.4 டிகிரி சென்டிகிரேட் இருக்கும். பசி இருக்காது. மலச்சிக்கல் இருக்கும்.
சூடான ஒத்தடம் மூட்டு வீக்கம், வலியை குறைக்கும். மணல் (அ) உப்பை சிறு மூட்டை போல் துணியில் கட்டி, சூடாக ஒத்தடம் கொடுக்கலாம். பெருங்காயம் கலந்த மருந்துகள், ஆமவாதாரி ரஸ்£, சௌபாக்கிய வடி, போன்ற பல ஆயுர்வேத மருந்துகள் குணமளிக்கும். உணவில் பாகற்காய் சேர்த்துக் கொள்வது பயனளிக்கும்.